சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை
சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை, இவன் பழந்தமிழ் அரச மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த ஒருவன். "மாக்கோதை" என்பது இவன் ஒரு இளவரசன் என்பதைக் குறிப்பதாகச் சொல்லப்படுகிறது[1]. இவனைப் பற்றிய தகவல்கள், சங்க இலக்கியம் மூலமே கிடைக்கிறது. இவனது மனைவி இறந்தபோது இவன் பாடியதாகக் கூறப்படும் பாடல் ஒன்று புறநானூற்றில் 245 ஆம் பாடலாக இடம்பெற்றுள்ளது.
செய்தி
தொகுஇறந்த என் மனைவியின் உடலைச் சுடுகாட்டில் வைத்து எரித்துவிட்டனர். அவளுடன் நானும் தீயில் விழுந்து இறந்திருக்கவேண்டும். அவ்வாறு செய்யாமல் மனத்திண்மையோடு உயிர் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். இப்படி உயிர் வாழ்வது என்ன பண்பு? ஈனப் பண்பல்லவா?
- இப்படிச் சொன்னவன் சிலகாலம் உயிர் வாழ்ந்து இறுதியில் கோட்டம்பலம் என்னுமிடத்தில் மனநோயாளியாய் உயிர் துறந்தான்.
குறிப்புகள்
தொகு- ↑ டான் பொஸ்கோ
உசாத்துணைகள்
தொகு- புலியூர்க் கேசிகன், புறநானூறு தெளிவுரை, பாரிநிலையம், சென்னை, 2004 (மறு பதிப்பு)
- டான் பொஸ்கோ, பண்டைய கேரளாவின் வரலாறு 03 ஏப்ரல் 2009 இல் அணுகப்பட்டது. பரணிடப்பட்டது 2009-03-26 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கில மொழியில்)