சேரமான் கோக்கோதை மார்பன்
சேரமான் கோக்கோதை மார்பன் என்பவன் சங்ககாலச் சேர மன்னர்களில் ஒருவன். பொய்கையார் என்னும் சங்ககாலப் புலவர் இவனைப் பாடியுள்ளார்.[1] இவனது ஊர் தொண்டி. எனவே, இவனைத் தொண்டி அரசன் என ஒருபாடலில் குறிப்பிடுகிறார். இவனை நாடிச் சென்றவர்கள் பிறரை நாடாத அளவுக்குக் கொடை நல்கும் பண்புடையவன் இவன்.[2] மற்றொரு பாடலில் பொறையன் என்பவன் மூவன் என்னும் பகைவனின் பல்லைப் பிடுங்கிக்கொண்டு வந்து தன் தொண்டிக் கோட்டைக் கதவில் பதித்துக்கொண்டான் என்கிறார். இதனால் இவன் கொங்குப் பகுதியாகிய பொறைநாட்டையும் ஆண்ட அரசன் எனத் தெரிகிறது. [3]
இவனது ஊர் ஆறு கடலில் கலக்குமிடத்தில் வளம் மிக்கதாக விளங்கியது. [4]
பிட்டன் இவனது படைத்தலைவனாகவும், சிற்றரசனாகவும் இருந்துகொண்டு குதிரைமலை நாட்டை ஆண்டுவந்தான். [5]
- கோதைமார்பன் என்று பெருஞ்சேரல் இரும்பொறை போற்றப்படுவதை இங்கு ஒப்புநோக்கிக்கொள்ள வேண்டும்.