பொறையன்
பொறைநாட்டு அரசன் பொறையன். இதில் பொறை என்னும் சொல் பாறையைக் குறிக்கும், பறை என்றும் பொருள் பெறும்.[1][2]
பொறை என்னும் சொல் ஈகம், அறிவு, பாரம் தாங்குதலையும் குறிக்கும்.[3][4] இதன் வழியே பொறை, பொறையன் என்னும் பெயருக்குக் குடிமக்களின் பாரத்தைத் தாங்குபவன் எனப் பொருள் காணலாம். இப் பெயர் பெற்ற அரசர்கள் 'பெரும்பொறை' என்றே குறிக்கப்படுகின்றனர். இந்த அரசர்கள் தம்மைக் குடிமக்களின் பாரம் தாங்குபவர்களாகக் கூறிப் பெயர் சூட்டிக்கொண்டனர்.
அகப்பாடல்களில் பொறையர்
தொகு- தொண்டி பொறையனின் துறைமுகம் [5] மூவன் என்பவனின் பல்லைப் பிடுங்கி வந்து இந்தத் தொண்டியிலுள்ள தன் கோட்டைக் கதவில் பொறையன் பதித்துக்கொண்டான்.[6]
- ‘பசும்பூண் பொறையன்’ என்றும் ‘வென்வேல் பொறையன்’ என்றும் போற்றப்பட்ட பொறையன் கொல்லி நாட்டில் படை நடத்தினான்.[7] கொல்லியை நூறினான் (அழித்தான்) [8][9] வென்று தனதாக்கிக்கொண்ட பின் பொறையன் கொல்லி மலைக்கு அரசன் ஆனான்.[10]
'இரும்பொறை' பெயர் பூண்டோர்
தொகுஅடிக்குறிப்பு
தொகு- ↑ பொறைய சுனை - நற்றிணை 161,
- ↑ பொறைய அருவி - அகநானூறு 345-14
- ↑ பொறைமரம் - அகநானூறு 282.
- ↑ பொறை தளர் கொம்பு - கலித்தொகை 34-12
- ↑ திண் தேர்ப் பொறையன் தொண்டி - நற்றிணை 8, குறுந்தொகை 128,அகநானூறு 60,
- ↑ தொண்டிப் பொருநன் வென்வேல் ... பொறையன் நற்றிணை 18
- ↑ மறம் மிகு தானை பசும்பூண் பொறையன் ... கொல்லி - அகம் 303,
- ↑ அகம் 338,
- ↑ வென்வேல் களிறு கெழு தானைப் பொறையன் கொல்லி - அகநானூறு 62,
- ↑ நற்றிணை 185, 346, குறுந்தொகை 89,
இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும். ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |