பிட்டன் சங்க காலச் சிற்றரசர்களில் ஒருவன். குதிரைமலைப் பகுதி இவன் நாடு. [1]

இவன் வேல் வீரன். [2]

வானவர் எனப்படும் சேரர்களின் படைத்தலைவனாக இவன் விளங்கினான். நறவு என்னும் இன்னீரை மற்றவர்களுக்குக் கொடுப்பதில் மகிழ்ச்சி காண்பவன் இவன். இவனது வேலைக் கண்டு பகைவர்கள் நடுங்கினார்களாம். [3]

இவன் வயது முதிர்ந்த காலத்தில் சமணத் துறவியாக மாறி ஆறுநாட்டான் மலையிலுள்ள சமணர் குகையில் வாழ்ந்ததைப் புகழூர்க் கல்வெட்டு குறிப்பிடுகிறது.

காண்க

அடிக்குறிப்பு தொகு

  1. வெல்போர் வானவன் மறவன் நசையின் வாழ்நர்க்கு நன்கலம் சுரக்கும் பொய்யா வாய்வாள் புனைகழல் பிட்டன் மைதவழ் உயர்சிமைக் குதிரைக் கவாஅன் - ஆலம்பேரி சாத்தனார் - அகம் 143
  2. மலை கெழு நாடன் கூர்வேல் பிட்டற் குறுகல் ஓம்புமின் – உறையூர் மருத்துவன் தாமோதரனார் - புறம் 170
  3. வானவன் மறவன் வணங்குவில் தடக்கை ஆனா நறவின் வண்மகிழ் பிட்டன் – மருதன் இளநாகனார் அகம் 77 வடமவண்ணக்கன் தாமோதரனார் புறம் 172.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிட்டன்&oldid=3851534" இலிருந்து மீள்விக்கப்பட்டது