மூவன்
மூவன் சங்ககால மன்னர்களில் ஒருவன். பெருந்தலைச்சாத்தனார் இவனை நேரில் கண்டு பாடியுள்ளார். பொய்கையார் இவனைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
பரிசில் நீட்டித்தான்
தொகுமூவன் நெல்வளம் மிக்க ஊரை ஆண்ட அரசன். இவன் போரைப் பெரிதும் விரும்புபவனாம். பழம் தேடிச் சென்ற வௌவால் மரத்தில் பழம் இல்லாமையால் வறிது மீள்வது போல இவனிடம் பரிசில் பெறாமல் இப் புலவர் பெருந்தலைச்சாத்தனார் வறிது மீண்டாராம். அதனால் "நம்முள் குறுநணி காண்குவதாக!" என்று சாபம் இடுகிறார். புறம் 209
மூவன் பல்
தொகுமூவன் பல்லைப் பிடுங்கி, தொண்டி அரசன் பொறையன் தன் கோட்டைக் கதவில் பதித்துக்கொண்டான் பொய்கையார் - நற்றிணை 18