முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன்

முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன் சங்ககால அரசப்புலவர்களில் ஒருவன். இவனது பாடல் ஒன்றே ஒன்று சங்கநூல் கொடையில் இடம்பெற்றுள்ளது. அது அகநானூறு 30; நெய்தல் திணையைச் சேர்ந்தது.

இதில் சொல்லப்பட்ட செய்தி:

தலைவன் தலைவியைப் பெறப் பட்டப்பகலில் வருகிறான். வந்தவன் வலைஞர் கானலுக்கு வந்து இரந்தவர்களின் வெற்றுப் பாத்திரம் நிரம்பும்படி வலை போட்டுப் பிடித்துவந்த மீன்களை வலைஞர் வழங்கும்போது, தன் காதலியாகிய தலைவியின் 'வண்ணம் எவனோ' என்று கேட்கக் கூடாதா? என்று தோழி வினவுகிறாள். (தலைவன் தலைவியின் வண்ணத்தைக் கேட்டால் திருமணம் செய்துகொள்ளப்போகிறான் என்பது பொருள்) [1]

மேற்கோள்

தொகு
  1. பெருமை என்பது கெடுமோ ஒரு நாள்
    மண்ணா முத்தம் அரும்பிய புன்னைத்
    தண் நறுங் கானல் வந்து, நும்
    வண்ணம் எவனோ? என்றனிர் செலினே? 15 (அகநானூறு 30)