மருதம் பாடிய இளங்கடுங்கோ

மருதம் பாடிய இளங்கடுங்கோ பழந் தமிழ் அரச மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்தவர். சங்கத் தமிழ் இலக்கிய நூல்களான அகநானூறு, நற்றிணை ஆகியவற்றில் காணப்படும் மூன்று பாடல்களைப் பாடிய புலவர் என்ற அளவிலேயே இவர் அறியப்படுகிறார்.

சேர நாணயங்களில காணப்படும் சேரமன்னர் முத்திரை, வாங்குவில் எனக் குறிப்பிடப்படும் எய்யும் வில்

புலவர் பெயர் தொகு

இவர் பாடிய மூன்று பாடல்ளும் மருதத்திணைப் பாடல்கள் ஆதலால் இவருக்கு 'மருதம் பாடிய' என்னும் அடைமொழியைத் தந்துள்ளனர்.

புகழூர்க் கல்வெட்டு தொகு

புகழூர் ஆறுநாட்டான் மலையிலுள்ள தமிழ் எழுத்துக் கல்வெட்டு சேரமன்னர் மூவரின் பரம்பரை வரிசையைத் தெரிவிக்கின்றது. 'கோ ஆதன் செல்லிரும்பொறை மகன் பெருங்கடுங்கோ மகன் இளங்கடுங்கோ' என்பது அந்தக் கால்வழி வரிசைமுறை. இதில் கூறப்பட்ட இளங்கடுங்கோ இந்தப் புலவன் எனலாம்.

இவரும், இளஞ்சேரல் இரும்பொறையும் ஒருவரே எனக் கூறுபவர்களும் உளர்[1]. எனினும் இதற்கான போதிய சான்றுகள் கிடைத்தில.

பாடல் சொல்லும் செய்திகள் தொகு

அகம் 96 தொகு

பரத்தை ஒழுக்கம் பற்றி ஊரே பேசும் அலரை ஏது காட்டித் தோழி தலைவனை வீட்டு வாயிலிலேயே நுழையமுடியாபடி தடுத்து நிறுத்திக் கூறுகிறாள்.

'பருவூர்ப் போர் பேசப்படுவதுபோல் பரத்தை உறவு பேசப்படுகிது. இனவே வீட்டுக்குள் நுழையாதே.'

காஞ்சி ஊரன் தொகு

தலைவன் காஞ்சிமரங்கள் நிறைந்த ஊரன்.

பூட்டறு வில் தொகு

நறவு உண்ட வெறும்பானையை மீன் துள்ளிவிழும்படி பொய்கைநீர் வெளியேறும் வழியில் வைத்திருந்தனர். அதில் விழுந்த இறால்மீன் பானையிலிருந்து துள்ளிக் குதித்ததாம். தூண்டில் பூட்டை அறுத்துக்கொண்டு துள்ளிக் குதிக்கும் மீன் போலத் துள்ளிக் குதித்ததாம். குதித்த மீன் அருகில் மூங்கில் முள் ஓரத்தில் படர்ந்திருக்கும் ஆம்பல் கொடிக்குள் பதுங்கிக்கொண்டதாம். இப்படிப்பட்ட பொய்கைகளும் காஞ்சிமரங்களும் நிறைந்த ஊரினனாம் தலைவன்.

பருவூர்ப் பறந்தலைப் போர் தொகு

பருவூர் போர்களத்தில் நடந்த போர்ச்செய்தி பல ஊர்களில் பேசப்பட்டது போல தலைவன் பரத்தையோடு இருந்த செய்தி ஊரெங்கும் பேசப்பட்டதாம்.

அடுபோர்ச் சோழர் ஆண்ட நெல் விளையும் வயல்வளம் மிக்க ஊர் பருவூர். அஃதை தந்தை இந்த ஊரில் நடந்த போரில் இருபெரு வேந்தரையும் போர்களத்திலேயே கொன்றான். இங்கு இருவெரு வேந்தர் என்னும் சொல் சேதனையும் பாண்டியனையும் குறிக்கும்.

அகம் 176 தொகு

தோழி தலைவனுக்கு வாயில் மறுக்கிறாள். காரணம் அவன் பரத்தையிடம் சென்று மீண்டான். தோழி தலைவனிடம் சொல்கிறாள்.

தலைவி பச்சைக் குழந்தை ஆண்மகனுடன் வாழ்கிறாள். வீட்டிலே நெல் இருக்கிறது. நீ இல்லை.

உன்னுடன் வாழ்ந்த பரத்தை உன்னோடு தழூஉ ஆடும்போது வளையலணிந்த தன் கையை விடுவித்துக்கொண்டு மலர்க்கண் பொங்க அழுதாள் என்றால், அவள் அவ்வாறு அழுவதற்கும், விரல்களை நெட்டி முரித்து உன்னை அனுப்புவதற்கும் என்ன கடமைப்பட்டிருக்கிறாள்? இப்போது அவள் தன் கூர் மழுங்கிய பல்லைக் காட்டிக்கொண்டு உன்னைக் காணச் சென்றுகொண்டிருக்கிறாளாமே! நீ ஏன் இங்கு வந்திருக்கிறாய்?

தலைவன் ஊரன். அந்த ஊர்ப் பழனம் எப்படிப்பட்டது?

கடல் போல் பரந்து கிடக்குமாம். நிலத்தைப் பிளந்துகொண்டு தாமரைக் கிழங்கு வேரில் முதிர்ந்திருக்குமாம். அதன் கொடி மூங்கில் போல் துளை கொண்டதாம். யானைக்காது போல் இலை கொண்டதாம். அதன் மொட்டு கழுமரம் நிமிர்நிருப்பது போல் நிமிர்ந்து நிற்குமாம். மகளிரின் முறுவல்முகம் போல மலர்ந்திருக்குமாம். வண்டு மொய்க்கும் ஒலி கேட்டுக்கொண்டே இருக்குமாம்.

வேப்பம்பூவின் மொட்டுப் போலக் கண்களை உடைய நண்டு அருகிலுள்ள காஞ்சிமரத்தில் அமர்ந்திருக்கும் வெள்ளைக் குருகு தன்னைக் கவர்ந்து செல்லாதபடி அருகில் பகன்றைப் பூ பூத்திருக்கும் சேற்றில் வரிக் கோடுகளைப் போட்டுக்கொண்டு வளையில் போய் ஒளிந்துகொள்ளுமாம். அப்படிப்பட்ட பழன ஊருக்குத் தலைவனாம் அவன்.

நற்றிணை 50 தொகு

 
யாண்

தன் மனைவிக்கும், தாய்க்கும் தெரியாமல், தன் அறியாமையால் தெருவில் நடக்கும் தழூஉ விழாவில் கலந்துகொள்ளத் தலைவன் சென்றான். அப்போது அவனுக்கு நண்பனோ பகைவனோ இல்லாத நொதுமலாளன் ஒருவன் தன் கைவலிமையையெல்லாம் சேர்த்து அவனைத் தாக்கினான். அப்போது தலைவன் தன்னைக் காப்பாற்ற 'இந்த ஊரில் யாராவது இருக்கிறார்களா, இல்லையா' என்று கதறினான். அவன் அன்று வீட்டுக்கு வந்தபோது அவன் உடம்பில் வீங்கிக் கிடக்கும் புண்ணை ”யாணது பசலை” என்று அவன் பாங்கன் நாணமின்றிக் கூறினான்.

அவனுக்கு எது பெருமை, எது சிறுமை என்றுகூடத் தெரியாமல் துணிவோடு பொய் சொல்லித் தன் தலைவனைப் போற்றிக்கொள்ளுமாறு வெட்கம் கெட்டுக் கெஞ்சினான். (அவனை எப்படி ஏற்றுக்கொள்வது - என்கிறாள் தோழி)

குறிப்புகள் தொகு

  1. புலியூர்க் கேசிகன், 2002. அக் 441

உசாத்துணைகள் தொகு

இவற்றையும் பார்க்கவும் தொகு