ஆரசீபோ தகவல்

ஆரசீபோ தகவல் (Arecibo message) என்பது 1974 நவம்பர் 16 ம் தேதி 25000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள கிளஸ்டர் M13 என்ற நட்சத்திரங்களுக்கு அனுப்பப்பட்ட செய்தியாகும்.[1] இந்த செய்தி மூன்று நிமிடங்கள் நீடித்து வானில் அனுப்பப்பட்டது. 210 பைட் (1679 பிட்)அளவுள்ள குறுஞ்செய்தி ஒன்று 2380 MHz அதிர்வெண்ணில் பரிமாறப்பட்டது. 1679 என்பதை 73 x 23 என்ற வரிசை (array) அமைப்பில் எழுத முடியும் என்பதால் ஏலியன்கள் இந்த செய்தியை படத்தில் வரைந்து பார்க்கும் போது இடது பக்கத்தில் உள்ள உருவம் கிடைக்கும்.

1974-ம் ஆண்டு நவம்பர் 16-ம் தேதி விண்வெளியில் ஒளிபரப்பப்பட்ட செய்தி.

இதில் உள்ள செய்திகள் பிராங்க் டிரேக் (Frank Drake) மற்றும் கார்ல் சேகன் (Carl Sagan) என்பவர்களால் எழுதப்பட்டன. அந்தப் படத்தில் கீழ்வரும் செய்திகள் இடம்பெற்றுள்ளன.

  1. எண்கள் 1 முதல் 10 (பைனரியில்)
  2. டி.என்.ஏ(DNA) மூலக்கூறை உருவாக்கும் ஹைட்ரஜன், ஆக்சிஜன், கார்பன், நைட்ரஜன், பாஸ்பரஸ் இவற்றின் அணு எண்கள்
  3. குளுகோசின் வேதியியல் வாய்ப்பாடு
  4. டி.என்.ஏ-வின் ஏணி போன்ற சுருள் வடிவம்
  5. மனிதனின் உருவம் (ஆண்)
  6. சூரிய மண்டலத்தின் உருவம்
  7. ஆரஷீபோ சமிக்ஞையை அனுப்பிய தொலைநோக்கியின் படம்

இந்த செய்தி விடையை எதிர்நோக்கி அனுப்பப்படவில்லை என்றாலும் பிரபஞ்சத்தில் நம் இருப்பை அறிவிக்கும் ஒரு சிறு முயற்சியாகும்.

குறிப்புகள்

தொகு
  1. "Cornell News: It's the 25th anniversary of Earth's first (and only) attempt to phone E.T." Nov 12, 1999. Archived from the original on 2008-08-02. பார்க்கப்பட்ட நாள் 2008-03-29.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆரசீபோ_தகவல்&oldid=3574810" இலிருந்து மீள்விக்கப்பட்டது