ஆரணி சிறீனிவாசுலு

இந்திய அரசியல்வாதி

ஆரணி சிறீனிவாசுலு (பிறப்பு 15 மே),[1] ஜங்கலபள்ளி சிறீனிவாசுலு[2] மற்றும் ஜேஎம்சி என்றும் அழைக்கப்படுபவர்,[3] இந்திய மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த அரசியல்வாதியும் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் ஒய். எஸ். ஆர். காங்கிரசு கட்சியின் சார்பாக 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஆந்திரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் சித்தூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆரணி சிறீனிவாசுலு
Arani Srinivasulu
ஆரணி சிறீனிவாசுலு, மார்ச் 2019-ல்
சட்டமன்ற உறுப்பினர் ஆந்திரப்பிரதேசம்
பதவியில் உள்ளார்
பதவியில்
2019
முன்னையவர்டி. கே. சத்ய பிரபா
தொகுதிசித்தூர் சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு15 மே
அரசியல் கட்சிஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
புனைப்பெயர்ஜங்கலபள்ளி சிறீனிவாசுலு,

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

ஆரணி கிருஷ்ணய்யாவுக்கு மகனாக ஆரணி சிறீனிவாசுலு பிறந்தவர்.[4]

அரசியல் வாழ்க்கை

தொகு

சிறீனிவாசலு 2009ஆம் ஆண்டு நடைபெற்ற ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் சித்தூர் சட்டமன்றத் தொகுதியில் பிரசா ராச்யம் கட்சி சார்பில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். பின்னர் பிராசா ராச்யம் கட்சியிலிருந்து விலகி தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்தார். தெலுங்கு தேசம் கட்சியில் சித்தூர் மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்டார்.[3] ஏப்ரல் 2014-ல், இவர் தெலுங்கு தேசத்திலிருந்து விலகி ஒய். எஸ். ஆர். காங்கிரசில் சேர்ந்தார்.[5] 2014ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் ஒய். எஸ். ஆர். காங்கிரசு கட்சி சார்பில் சித்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தெலுங்கு தேச கட்சியின் சத்திய பிரபாவிடம் தோல்வியடைந்தார்.[6][7] மீண்டும் 2019ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[8][9]

மேற்கோள்கள்

தொகு
  1. "ఘనంగా చిత్తూరు ఎమ్మెల్యే జన్మదిన వేడుకలు" [Birthday celebrations of Chittoor MLA]. Sakshi (newspaper) (in தெலுங்கு). 16 May 2022. பார்க்கப்பட்ட நாள் 23 November 2022.
  2. "YSR Congress Party releases full list of candidates for Lok Sabha election, Assembly poll in Andhra Pradesh". Zee News (in ஆங்கிலம்). 27 March 2019. பார்க்கப்பட்ட நாள் 23 November 2022.
  3. 3.0 3.1 "బాబుకు జేఎంసీ షాక్" [JMC shocks Babu]. Sakshi (newspaper) (in தெலுங்கு). 9 April 2014. பார்க்கப்பட்ட நாள் 23 November 2022.
  4. "Affidavit Information of Candidate". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 23 November 2022.
  5. "సొంత జిల్లాలో చంద్రబాబుకు షాక్" [Shock for Chandrababu in his own district]. Sakshi (newspaper) (in தெலுங்கு). 8 April 2014. பார்க்கப்பட்ட நாள் 23 November 2022.
  6. "AP Politics: రాజకీయాల్లో యాక్టీవ్ అవుతున్న చిత్తూరు నేత.. పెద్దిరెడ్డితో వైరం ప్లస్సా.. మైనస్సా..!" [AP Politics: Chittoor leader who is active in politics.. Void with Peddireddy Positive.. Negative..!]. News18 Telugu (in தெலுங்கு). 20 April 2022. பார்க்கப்பட்ட நாள் 23 November 2022.
  7. "Former Chittoor MLA Satyaprabha passes away". https://www.thehindu.com/news/national/andhra-pradesh/former-chittoor-mla-satyaprabha-passes-away/article33138851.ece. 
  8. "Andhra Pradesh: Chittoor Kannan school celebrates diamond jubilee". https://www.thehindu.com/news/national/andhra-pradesh/andhra-pradesh-chittoor-kannan-school-celebrates-diamond-jubilee/article65882446.ece. 
  9. "Chittoor Constituency Winner List in AP Elections 2019". Sakshi (newspaper). பார்க்கப்பட்ட நாள் 23 November 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆரணி_சிறீனிவாசுலு&oldid=3700367" இலிருந்து மீள்விக்கப்பட்டது