ஆரம்பம் பாபி சிங்

ஆரம்பம் பாபி சிங் (Arambam Boby Singh) என்பவர் இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த உடல் கட்டுனர் ஆவார்[1][2][3][4][5][6][7]. 2010 ஆம் ஆண்டு இந்தியாவின் வாரணாசியில் நடைபெற்ற முதலாவது உடல் கட்டுனர் சாம்பியன் பட்டப்போட்டியில் 75 கிலோ ஆடவர் பிரிவில் முதலிடத்தைப் பிடித்தார். அன்று முதல் இவர் தொடர்ச்சியாக இந்தியாவின் சார்பில் பங்கேற்று வருகிறார். பாபி சிங் மூன்று முறை தெற்காசிய சாம்பியன் பட்டத்தையும் ஐந்து முறை ஆசிய ஆணழகர் பட்டத்தையும், எட்டு முறை உலக ஆணழகர் பட்ட்த்தையும், 12 முறை இந்திய ஆனழகர் பட்டத்தையும் வென்றார்[8].

ஆரம்ப வாழ்க்கை தொகு

1975 ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் நாளில் பாபி சிங் பிறந்தார். இந்தியாவின் வடகிழக்கிலுள்ள சிறிய மாநிலமான மணிப்பூரில் இவர் பிறந்தார். காலஞ்சென்ற ஆரம்பம் இபோம்சா மற்றும் ஆரம்பம் ஓங்பி தாசுமதி தேவி ஆகியோர் இவருடைய பெற்றோர்களாவர். பாபிக்கு இரண்டு வயதாக இருந்தபோது தன்னுடைய தந்தையை இழந்தார். குடும்ப சூழல் காரண\மாக இவரது கல்வி இடைநிலையோடு நின்று போனது. லாங்கோலில் இருந்த இந்திய விளையாட்டு ஆணையத்தில் 1989 ஆம் ஆண்டு உடற்பயிற்சியாளராகச் சேர்ந்தார். சாசசுத்ரா சீமா பால் என்ற நிறுவனத்தில் விளையாட்டு அறிமுக திட்டத்தில் 1993 ஆம் ஆண்டு ஒரு காவலராகப் பணியில் சேர்ந்தார். பின்னர் தன்னுடைய ஆர்வத்தை தடகளத்திற்கு மாற்றிக்கொண்டு 100மீ மற்றும் 200மீ ஓட்டப்பந்தய வீர்ராக மாறினார் [9].

உடல் கட்டுனர் தொகு

1995 ஆம் ஆண்டில் பாபி உடல் கட்டுனராக தன்னுடைய புதிய வாழ்க்கையைத் தொடங்கினார். 1996 இல் மணிப்பூர் ஆணழகராக ஒட்டுமொத்த இளையோர் மற்றும் மூத்தோர் பட்டங்களை வென்றார். இதே ஆண்டில் தில்லியில் நடைபெற்ற ஆசிய இளையோர் உடல் கட்டுனர் சாம்பியன் பட்டப் போட்டியில் இந்தியாவின் சார்பாக பங்கேற்றார். 1997 ஆம் ஆண்டில் இந்திய இரயில்வே துறையில் பணியில் சேர்ந்தார். 1998 ஆம் ஆண்டு இந்திய ஆணழகர் என்ற பட்டத்தையும், 2010 ஆண்டில் உலக ஆணழகர் பட்டத்தையும் வென்றார்[10][11]. .

மேற்கோள்கள் தொகு

  1. musselsg (2013-03-17), World 2012 - Arambam Boby Singh (India), பார்க்கப்பட்ட நாள் 2017-10-27
  2. "Arambam Boby clinches second gold for India at World Body-building Championship". 2015-12-01. https://www.sportskeeda.com/bodybuilding/arambam-bobby-clinches-second-gold-india-world-body-building-championship. 
  3. "Profile of Arambam Boby Mr World 2011". e-pao.net.
  4. "Manipur's physique Arambam Boby wins Mr. World 2015 - Sevendiary.com | Discover Northeast India - Culture, Lifestyle and Travel". sevendiary.com (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2017-10-27. பார்க்கப்பட்ட நாள் 2017-10-27.
  5. "Arambam Boby Singh - India, 8th WBPF World Ch". www.wbpf-tv.com (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Archived from the original on 2017-10-27. பார்க்கப்பட்ட நாள் 2017-10-27.
  6. "Arambam Boby Singh | ThaiBody". www.thaibody.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-10-27.
  7. "Arambam Boby And 12 Other Indian Bodybuilders You Need To Know About!" (in en). indiatimes.com. https://www.indiatimes.com/news/sports/thakur-anoop-singh-and-12-other-bodybuilders-who-are-making-india-proud-247965.html. 
  8. "Arambam Boby Wins His Fifth World Bodybuilding Title". 5 December 2016.
  9. "Arambam Boby Wins His Fifth World Bodybuilding Title" (in en-US). The Logical Indian. 2016-12-05. https://thelogicalindian.com/story-feed/sports/arambam-boby/. 
  10. www.nfr.indianrailways.gov.in/uploads/files/1482907871555-A.Boby%20Singh.pdf. 
  11. Jha, Rakesh. "Arambam Boby Singh: An extraordinary story of a world champion!". www.indiansportsnews.com (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-10-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆரம்பம்_பாபி_சிங்&oldid=3592953" இலிருந்து மீள்விக்கப்பட்டது