ஆரம் (மாலை)
கழுத்தில் மாட்டப்பட்டு மார்பில் தொங்கும் அணிகலனை ஆரம் (ⓘ) என்பர். முத்துமாலை போன்றவை இந்த ஆர வகையில் அடங்கும்.
ஆரம் மகளிர் மார்பக அணிகலன்களில் ஒன்று[1]. முத்தாரம் அவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்று[2] வைரமணி மாலை அரசர்கள் அணிந்திருந்தனர்[3].
இக்காலத்தில் மலர்மாலையையும் ஆரம் என வழங்குகின்றனர்.
ஆரம் என்னும் சொல் 'ஹாரம்' என்னும் வடசொல்லிலிருந்து வந்தது எனச் சிலர் கருதுகின்றனர். இந்தக் கருத்து போலியானது.
"கண் ஆர் கண்ணி, கடுந் தேர்ச் செழியன்" [4] என்னும் தொடரில் ஆர் என்பது ஆத்திமாலை அன்று: வளைவாகச் சுழற்றிக்கட்டிய தலைமாலையை உணர்த்தும் சொல் என்பது தெளிவு. "ஆரைச் சாகாடு" [5] என்றவிடத்து ஆர் என்பது 'வட்டமான வண்டிச்சக்கரம்' எனப் பொருள்படுவதும் மற்றொரு தெளிவான சான்று.
மேற்கோள்கள்
தொகு- ↑ அணி முலைத் துயல்வரூஉம் ஆரம் போல (சிறுபாணாற்றுப்படை 2)
- ↑ மாண் இழை மகளிர், புலந்தனர், பரிந்த (680)
பரூஉக் காழ் ஆரம் சொரிந்த முத்தமொடு, (மதுரைக்காஞ்சி) - ↑ பாண்டியன் நெடுஞ்செழியன் காலையில் எழுந்ததும் வைரமாலை அணிந்துகொண்டான்
திண் காழ் ஆரம் நீவி, கதிர் விடும் (715)
ஒண் காழ் ஆரம் கவைஇய மார்பின் (மதுரைக்காஞ்சி) - ↑ சிறுபாணாற்றுப்படை 65
- ↑ புறநானூறு 60