ஆரிஃப் மசூது

இந்திய அரசியல்வாதி

ஆரிஃப் மசூது (Arif Masood) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியுடன் தொடர்புடைய இவர் 153 போபால் மத்திய சட்டமன்ற தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் மத்திய பிரதேச சட்டமன்ற உறுப்பினராக அறியப்படுகிறார். 2018 ஆம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக முதல் முறையாக மத்திய பிரதேச சட்டமன்றத்திற்கு இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது மத்தியப் பிரதேசத்தில் இருந்த இரண்டு இசுலாமிய சட்டமன்ற உறுப்பினர்களில் இவரும் ஒருவராவார். [1]

ஆரிஃப் மசூது
Arif Masood

عارف مسعود

आरिफ मसूद
சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2018
தொகுதிபோபல் மத்தியா சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்உருபீனா மசூது
பிள்ளைகள்2 மகன்கள் & 2 மகள்கள்
வாழிடம்(s)போபால், மத்தியப் பிரதேசம், இந்தியா
முன்னாள் கல்லூரிபர்கத்துல்லா பல்கலைக்கழகம், போபால் (இளங்கலைச் சட்டம்)

1998 ஆம் ஆண்டு மாநில சட்டக் கல்லூரியில் இளநிலை சட்டப் படிப்பை முடித்த பிறகு, 2000 ஆம் ஆண்டில் அரசு பெனசீர் கல்லூரியில் முதுகலைப் படிக்கும் போது ஆரிஃப் மசூது மாணவர் அரசியலில் நுழைந்தார். காங்கிரசு கட்சியில் தனது வாழ்க்கையைத் தொடங்கிய அவர் பின்னர் 2003 ஆம் ஆண்டில் சமாச்வாடி கட்சிக்கு மாறினார். ஆனால், 2007 ஆம் ஆண்டில் மீண்டும் காங்கிரசு கட்சிக்குத் திரும்பினார்.

மேற்கோள்கள் தொகு

  1. "MLA Details MP Vidhan Sabha" (PDF).
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆரிஃப்_மசூது&oldid=3816935" இலிருந்து மீள்விக்கப்பட்டது