ஆரியப் பொருநன்

ஆரியப் பொருநன் பாணன் என்பவனை மற்போரிட்டுத் தாக்கினான் என அகநானூறு குறிப்பிடுகிறது. பாணன் மார்பில் குத்தும்போது ஆரியப் பொருநனின் கையின் தோள்பட்டை மூட்டு நழுவி விட்டது. எனவே ஆரியப்பொருநன் வீழ்ந்து விட்டான். இது தெரியாமல் பாணன் மேலும் ஆரியப் பொருநனைத் தாக்கினான்.

மற்போர் வகை

இதனைப் பார்த்துக்கொண்டிருந்த கணையன் பாணனின் செயல் கண்டு நாணினான்.[1]

பக்கத்து வீட்டுக்காரி தலைவியிடம் வந்தாள். தலைவியின் முகத்தையும் கூந்தலையும் தன் மெல்லிய விரல்களால் தடவிக்கொடுத்துக் கொண்டு "நானும் உனக்குத் தங்கை ஆவேன், தெரிந்துகொள்" என்றாள். இவள் தலைவனின் காதல் பரத்தை என்பது தலைவிக்குப் புரிந்து விட்டது. தலைவி தன் கணவன் செயலை எண்ணி நாணம் கொண்டாள். கணையன் நாணியது போல் தலைவி நாணினாள் என்கிறார் புலவர்.

சான்று

தொகு
  1. நாணினென் பெரும யானே! பாணன் மல் அடு மார்பின் வலி உற வருந்தி எரிர்தலைக் கொண்ட ஆரியப் பொருநன் நிறைத்திரள் முழவுத்தோள் கையகத்து ஒழிந்த திறன் வேறு கிடக்கை நோக்கி நற்போர்க் கணையன் நாணியாங்கு – பரணர் – அகநானூறு 386
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆரியப்_பொருநன்&oldid=2488173" இலிருந்து மீள்விக்கப்பட்டது