ஆரேண்டல்ஸ்ஃபெல்ட்டெட்

ஆரேண்டல்ஸ்ஃபெல்ட்டெட் (Arendalsfeltet) என்பது நார்வே நாட்டிலுள்ள ஒரு புவியியல் மாகாணமாகும். இது ஆரேண்டல்(Arendal) எல்லைகளுக்குள் அமைந்த ஆஸ்ட்-அக்டெர்(Aust-Agder) மாவட்டத்தில் ஃபெவிக்(Fevik) மற்றும் டெடெஸ்ட்ரண்ட்(Tvedestrand)க்கு இடையில் அமைந்துள்ளது. இங்கு இரும்புத் தாது படிமங்கள் அமைந்துள்ளதால் இந்த இடம் அறியப்படுகிறது.

முதன்முதலில் 1585ஆம் ஆண்டு ஆரேண்டல்ஸ்ஃபெல்ட்டெட்டிலிருந்து இரும்புத் தாது பிரித்தெடுக்கப்பட்டது. சுரங்கத் தொழிலானது 1975 வரை தொடர்ந்தது. இங்கு கிடைக்கும் இரும்புத் தாது உயர்ந்த தரம் வாய்ந்ததாக இருந்தது. பழைய நார்வேயின் இரும்பு வேலைகளுக்கு இந்த இரும்புத் தாது அதிகம் தேவைப்பட்டது. அவர்கள் பயன்படுத்திய இரும்பு தாதுக்களில் மூன்றில் இரண்டு பங்கு ஆரேண்டல்ஸ்ஃபெல்ட்டெட்டிலிருந்து வந்தவையாகும்.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆரேண்டல்ஸ்ஃபெல்ட்டெட்&oldid=2779930" இலிருந்து மீள்விக்கப்பட்டது