ஆரோரைட்டு

ஐதராக்சைடு கனிமம்

ஆரோரைட்டு (Aurorite) என்பது (Mn2+,Ag,Ca)Mn4+3O7·3H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். அமெரிக்காவின் நெவாடா மாநிலத்தின் வொயிட் பைன் மாகாணத்தில் உள்ள வடக்கு ஆரோரா சுரங்கத்தில் இந்த கனிமம் கண்டறியப்பட்டது. கண்டுபிடிக்கப்பட்ட இடத்தின் நினைவாக கனிமத்திற்கு ஆரோரைட்டு எனப் பெயரிடப்பட்டது. ஆரோரைட்டு கருப்பு நிறத்தில் காணப்படுகிறது.[1]

ஆரோரைட்டு
Aurorite
கால்சைட்டில் காணப்படும் ஆரோரைட்டு
பொதுவானாவை
வகைகனிமம்
வேதி வாய்பாடு(Mn2+,Ag,Ca)Mn4+3O7·3H2O
இனங்காணல்
நிறம்கருப்பு, பிரதிபலிக்கப்பட்ட ஒளியில் வெளிர் பழுப்பு விளிம்பு
மிளிர்வுஉலோகத் தன்மை
ஒப்படர்த்தி3.81

பன்னாட்டு கனிமவியல் சங்கம் ஆரோரைட்டு கனிமத்தை Aro என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆரோரைட்டு&oldid=4130476" இலிருந்து மீள்விக்கப்பட்டது