ஆர்குடைட்டு
ஆக்சைடு கனிமம்
ஆர்குடைட்டு (Argutite) என்பது GeO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். ஓர் அரிய செருமேனியம் ஆக்சைடு கனிமம் என்று இது வகைப்படுத்தப்படுகிறது. உரூட்டைல் வகை கனிமக் குழுவில் ஆர்குடைட்டும் ஓர் உறுப்பினராகும்.
ஆர்குடைட்டு Argutite | |
---|---|
பொதுவானாவை | |
வகை | ஆக்சைடு கனிமம் |
வேதி வாய்பாடு | GeO2 |
இனங்காணல் | |
மோலார் நிறை | 104.61 |
நிறம் | சாம்பல் கருப்பு, பிரதிபலிக்கப்பட்ட ஒளியில் இளம் சாம்பல் |
படிக இயல்பு | சிபேலரைட்டில் உள்ளடங்கிய பகுதிவடிவ படிகங்கள் |
படிக அமைப்பு | நாற்கோணம் இருநாற்கோண இரட்டைக்கூர்நுனி கோபுர வகை |
இரட்டைப் படிகமுறல் | {101} இல் எப்போதாவது இருபகுதியாக பிரதிபலிக்கும் |
மோவின் அளவுகோல் வலிமை | 6-7 |
மிளிர்வு | பளபளப்பு – விடாப்பிடியான பளபளப்பு |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகும் மற்றும் ஒளிபுகாது. |
ஒப்படர்த்தி | 6.28 (கணக்கிடப்பட்டது) |
ஒளியியல் பண்புகள் | ஒற்றை அச்சு (+) |
ஒளிவிலகல் எண் | 2.01 |
மேற்கோள்கள் | [1][2][3] |
1983 ஆம் ஆண்டு பிரான்சு நாட்டில் இக்கனிமம் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நாட்டிலுள்ள பிரனீசு மலைத்தொடர் பகுதியிலுள்ள ஆர்குட் படிவுகளில் ஆர்குடைட்டு காணப்பட்டது. உருமாற்றத்திற்கு உட்பட்ட குறைந்த வளருருமாற்றம் அடைந்த தொல்லூழிக்கால வண்டல் பாறைகளுக்குள் ஒரு துத்தநாக தாதுப் படிவாக இவ்விடத்தில் கனிமம் தோன்றியுள்ளது. சிபேலரைட்டு, கேசிட்டரைட்டு, சிடரைட்டு, பிரியார்டைட்டு போன்ற கனிமங்களுடன் சேர்ந்து ஆர்குடைட்டு காணப்படுகிறது.