ஆர்சனிக்கல் தாமிரம்
ஆர்சனிக்கல் தாமிரம் (Arsenical copper) என்பது 0.5% ஆர்சனிக்கைக் கொண்டுள்ள ஒரு கலப்புலோகமாகும். உயர் வெப்பநிலைகளில் உயர் இழுவலிமையும் குறைக்கப்பட்ட அளவிடல் இயல்பும் கொண்டதாக இக்கலப்புலோகம் காணப்படுகிறது. கொதிகலன் தயாரிப்பில், குறிப்பாகத் தொடர்வண்டி நெருப்பறைகளில் இக்கலப்புலோகம் பயன்படுத்தப்படுகிறது[1][2][3]. பிசுமத், ஈயம் ஆண்டிமனி போன்ற தனிமங்கள் ஆக்சிசனற்ற தாமிரத்துடன் வினைபுரிந்து அணைவு ஆக்சைடுகளை உருவாக்கி தாமிரத்தின் நொறுங்குதன்மையூட்டத்தைக் குறைக்கின்றன. இதைத் தடுப்பதற்கும் ஆர்சனிக்கல் தாமிரம் கலப்புலோகம் பயன்படுகிறது. அதிக அளவு ஆர்சனிக் சேர்த்து தயாரிக்கப்படும் கலப்புலோகம் ஆர்சனிக்கல் வெண்கலம் என்று அழைக்கப்படுகிறது. இது சாதாரண தாமிரத்தைக்காட்டிலும் வலிமையானதாக உள்ளது.