ஆர்செனி நெசுடெரோவு

உருசிய சதுரங்க வீரர்

ஆர்செனி யூரிவிச் நெசுடெரோவு (Arseniy Yurievich Nesterov) உருசிய நாட்டைச் சேர்ந்த ஒரு சதுரங்க வீரராவார். 2003 ஆம் ஆண்டு சனவரி மாதம் 20 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். பிடே அமைப்பு 2022 ஆம் ஆண்டு ஆர்செனி யூரிவிச் நெசுடெரோவுக்கு கிராண்டுமாசுட்டர் பட்டத்தை வழங்கியது.

ஆர்செனி நெசுடெரோவு
நாடுஉருசியா (2022 வரை)
பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு (2022முதல்)
பிறப்புசனவரி 20, 2003 (2003-01-20) (அகவை 21)
பட்டம்கிராண்டுமாசுட்டர் (2022)[1]
பிடே தரவுகோள்2523 (திசம்பர் 2021)
உச்சத் தரவுகோள்2575 (செப்டம்பர் 2022)

சதுரங்க வாழ்க்கை

தொகு

2018 ஆம் ஆண்டு மே மாதத்தில் ஐரோப்பிய இளையோர் கிராண்ட் பிரிக்சின் வான்யா சோமோவ் கட்டத்தின் தொடக்கத்தில், அமெரிக்க சதுரங்க வீரர் சாந்து சர்க்சியனுடன் நெசுடெரோவ் போட்டியை வழிநடத்தினார். [2] இறுதியில் 12 வீரர்கள் பட்டியலில் 10 ஆவது இடத்தைப் பிடித்தார். [3]

2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மாசுகோவில் நடைபெற்ற ஏரோஃப்ளோட்டு திறந்தநிலை போட்டியில் நெசுடெரோவு தனது இறுதி கிராண்டு மாசுட்டர் தகுதிநிலையை பெற்றார். செப்டம்பர் 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 75 ஆவது உருசிய சதுரங்க வெற்றியாளர் போட்டியில் பங்கேற்றார், 12 வீரர்கள் கொண்ட அப்போட்டியில் கடைசி இடத்தைப் பிடித்தார். [4]

நெசுடெரோவ் 2023 ஆம் ஆண்டு சதுரங்க உலகக் கோப்பை போட்டியில் போட்டியிட்டார், அங்கு இவர் முதல் சுற்றில் பெர்னாண்டோ பெரால்டாவை தோற்கடித்தார், ஆனால் இரண்டாவது சுற்றில் அனிசு கிரியால் தோற்கடிக்கப்பட்டார். [5]

மேற்கோள்கள்

தொகு
  1. "FIDE Title Application (GM)" (PDF).
  2. "Arseniy Nesterov and Shant Sargsyan Lead Vanya Somov Memorial". May 17, 2018.
  3. Bajarani, Ilgar (May 26, 2018). ""World`s Youth Stars" Vanya Somov's Memorial - 3 stage European Youth Grand Prix".
  4. Crowther, Mark (September 22, 2022). "75th Russian Chess Championship 2022".
  5. "FIDE World Cup 2023: Preliminary lists of eligible players announced".
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்செனி_நெசுடெரோவு&oldid=3780646" இலிருந்து மீள்விக்கப்பட்டது