ஆர்ச்சரைட்டு

பாசசுப்பேட்டு வகை கனிமம்

ஆர்ச்சரைட்டு (Archerite) என்பது (K,NH4)H2PO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு பாசுப்பேட்டு வகைக் கனிமமாகும். ஆத்திரேலியாவிலுள்ள நியூ சவுத் வேல்சு பல்கலைக்கழகத்தின் உயிரியல் பேராசிரியரான மைக்கேல் ஆர்ச்சர் (பிறப்பு 25 மார்ச்சு 1945) கண்டுபிடித்த காரணத்தால் அவரது பெயர் இக்கனிமத்திற்குச் சூட்டப்பட்டுள்ளது. மேற்கு ஆத்திரேலியாவிலுள்ள டந்தாசு சையர் பகுதியின் சாலையோர கிராமமான மதுராவிலுள்ள பெட்ரோகேல் குகையில் ஆர்ச்சரைட்டு முதன் முதலில் கண்டறியப்பட்டது. கடற்பறவைகள், வௌவால்கள் போன்றவற்றின் கழிவுகள் கொண்ட குகைகளின் சுவர்களில் மேற்படிவுகளாகவும், தொங்கூசிப் பாறைகளாகவும் ஆர்ச்சரைட்டு காணப்படுகிறது. [1][2][3]

ஆர்ச்சரைட்டு
Archerite
பைபாசுப்பமைட்டு கனிமத்தின் மீது ஆர்ச்சரைட்டு (வெண்மை)
பொதுவானாவை
வகைகனிமம்
வேதி வாய்பாடு(K,NH4)H2PO4
இனங்காணல்
நிறம்வெண்மை
படிக அமைப்புநாற்கோணம்
பிளப்புஇல்லை
முறிவுசமமற்றது
விகுவுத் தன்மைநொறுங்கும்
மோவின் அளவுகோல் வலிமை1-2
மிளிர்வுதுணைபளபளப்பு, மெழுகுத் தன்மை
கீற்றுவண்ணம்வெண்மை
ஒளிஊடுருவும் தன்மைஒளி கசியும்
ஒப்படர்த்தி2.23
அடர்த்தி2.23 கி/செ.மீ3

பன்னாட்டு கனிமவியல் சங்கம் ஆர்ச்சரைட்டு கனிமத்தை Aht[4] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. Webmineral - Archerite
  2. Mindat.org - Archerite
  3. "Handbook of Mineralogy - Archerite" (PDF). Archived from the original (PDF) on 2020-11-26. பார்க்கப்பட்ட நாள் 2021-01-26.
  4. Warr, L.N. (2021). "IMA-CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்ச்சரைட்டு&oldid=4119868" இலிருந்து மீள்விக்கப்பட்டது