ஆர்தர் பீல்ட்ஸ்
ஆர்தர் பீல்ட்ஸ் (Arthur Fields) (1901–1994) அயர்லாந்து நாட்டின் டப்லின் நகர தெருப்புகைப்படக்காரர். அவர் டப்லின் நகரின் ஓகானல் பாலம் அருகில் உள்ள பாதசாரிகளை 180,000 க்கும் அதிகமான புகைப்படங்கள் எடுத்துள்ளார். இவர் 50 வருடங்களுக்கும் மேலாக இப்புகைப்படங்களை எடுத்து வந்தார்.[1][2] இவர் உக்ரேனிய நாட்டில் யூதக்குடும்பம் ஒன்றில் பிறந்தவர். அவரது குடும்பம் 1900 ஆம் ஆண்டு டப்லினுக்கு இடம் பெயர்ந்தது. ஆர்தர் பீல்ட்ஸ் ஒலிகளை பதிவுசெய்யும் அரங்கம் ஒன்றை நடத்தினார். மக்கள் தங்களின் சொந்தக்குரலைப் பதிவு செய்து வந்தனர். பின்னர் அவர் சொந்தமாக ஒரு புகைப்படக்கருவியை வாங்கினார்[1]. இவரின் சகோதரரும் அதே பாலத்தில் புகைப்படக்கலைஞராக இருந்தார்[1]. 1930 முதல் 1980 வரையிலான டூப்ளின் நகர சமூகத்தை பிரதிபலிப்பதாக இவரது புகைப்படங்கள் அமைந்துள்ளன[1].
இவர் 1930 முதல் 1985 வரை சராசரியாக 182,000 புகைப்படங்களை எடுத்துள்ளார்[1]. தனது வீட்டிலிருந்து ஓகானல் பாலத்திற்கான 7 மைல் தூரத்தை தினமும் நடந்தே செல்வார். பாதசாரிகளை அவர் எடுக்கும் புகைப்படங்களுக்கான சீட்டை அவர் பாதசாரிகளிடம் கொடுப்பார். அவர்கள் அதை பீல்ட்சின் மனைவி நடத்தும் கடையில் கொடுத்து தயாரான புகைப்படங்களை வாங்கிச் செல்வர்.
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 "Arthur Fields: the man on O'Connell bridge". The Guardian. 18 August 2013. http://www.theguardian.com/artanddesign/2013/aug/18/arthur-fields-man-oconnell-bridge-photographs.
- ↑ "Man on a Bridge". The Irish Times. 18 August 2013. http://www.irishtimes.com/news/galleries/man-on-a-bridge-1.1488230.