ஆர்தர் பெரிடேல் கீத்து

ஆர்தர் பெரிடேல் கீத்து (Arthur Berriedale Keith) (5 ஏப்ரல் 1879 - 6 அக்டோபர் 1944) இசுக்காட்லாந்தைச் சேர்ந்த அரசியல்சட்ட சட்டவல்லுனரும், சமசுக்கிருதம், இந்தியவியல் அறிஞரும் ஆவார். இவர் எடின்பரோ பல்கலைக்கழகத்தில் சமசுக்கிருதத்துக்கான அரசப் பேராசிரியராகவும், அரசியல்சட்ட வரலாற்றுக்கான விரிவுரையாளராகவும் பணியாற்றினார். 1914 முதல் 1944 வரை 30 ஆண்டுகள் கீத்து இப்பணியில் இருந்தார்.

ஆர்தர் பெரிடேல் கீத்து
பிறப்பு5 ஏப்பிரல் 1879
எடின்பரோ
இறப்பு6 அக்டோபர் 1944 (அகவை 65)
எடின்பரோ
படித்த இடங்கள்
பணிபல்கலைக்கழகப் பேராசிரியர்
எடின்பரோவில் உள்ள ஆர்தர் பெரியடேல் கீத்தின் கல்லறை

நூல்கள் தொகு

அரசியல் சட்டம் அதன் வரலாறு என்பன தொடர்பிலும் இந்தியவியல் தொடர்பிலும் ஆங்கிலத்தில் பல நூல்களை இவர் எழுதியுள்ளார்.[1] இந்தியத் தொன்மவியல் (Indian Mythology)-1917, வேதங்களினதும் உபநிடதங்களினதும் சமயமும் மெய்யியலும் (The Religion and Philosophy of the Veda and Upanishads)-1925, சாங்கிய முறை: சாங்கிய மெய்யியல் வரலாறு (The Samkhya System: A History of the Samkhya Philosophy)-1918, இந்தியாவில் பௌத்த மெய்யியல் (Buddhist Philosophy in India), சமசுக்கிருத இலக்கியத்தின் வரலாறு (A History of Sanskrit Literature)-1920 ஆகியவை இந்தியவியலில் இவர் எழுதிய நூல்களில் குறிப்பிடத்தக்கவை. இவை தவிர, ஐத்தரேய ஆரண்யகம், தைத்திரீய சம்கிதை, ரிக் வேத பிராமணங்களான ஐத்தரேய பிராமணம், கௌசிதாக்கி பிராமணம் ஆகியவற்றை இவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

இறப்பு தொகு

6 அக்டோபர் 1944ல் கீத்து காலமானார். இவரது உடல் எடின்பரோவில் உள்ள கிராங்கே மயானத்தில் இவரது மனைவி மார்கிரெட் பல்ஃபர் அலனின் உடலுக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்தர்_பெரிடேல்_கீத்து&oldid=2895692" இலிருந்து மீள்விக்கப்பட்டது