ஆர்தர் மில்லர்
ஆர்தர் ஆஷேர் மில்லர் (Arthur Asher Miller, அக்டோபர் 17, 1915 – பெப்ரவரி 10, 2005)[1][2] ஓர் அமெரிக்க நாடகாசிரியரும் கட்டுரையாளரும் ஆவார். அமெரிக்க நாடகத் துறையில் புகழ்பெற்று விளங்கிய மில்லரின் சிறப்பான நாடகங்களாக ஆல் மை சன்ஸ் (1947), டெத் ஆஃப் எ சேல்ஸ்மேன் (1949), த குருசிபிள் (1953), மற்றும் எ வியூ ஃபிரம் த பிரிட்ஜ் (ஓரங்கம், 1955; ஈரங்கமாகத் திருத்தப்பட்டது, 1956) ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
ஆர்தர் மில்லர் | |
---|---|
பிறப்பு | ஆர்தர் ஆஷேர் மில்லர் அக்டோபர் 17, 1915 ஹார்லம், நியூயார்க் நகரம், நியூயார்க் |
இறப்பு | பெப்ரவரி 10, 2005 ராக்ஸ்பரி,கனக்டிகட், ஐக்கிய அமெரிக்கா | (அகவை 89)
தொழில் | நாடகாசிரியர், கட்டுரையாளர் |
தேசியம் | அமெரிக்கர் |
கல்வி நிலையம் | மிச்சிகன் பல்கலைக்கழகம் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | டெத் ஆஃப் எ சேல்ஸ்மேன் த குருசிபிள் எ வியூ ஃபிரம் த பிரிட்ஜ் |
குறிப்பிடத்தக்க விருதுகள் | நாடகத்திற்கான புலிட்சர் பரிசு (1949) கென்னடி மையம் விருதுகள் (1984) |
துணைவர் | மேரி ஸ்லேட்டரி (1940–56) மர்லின் மன்றோ (1956–61) இங்கெ மோரத் (1962–2002) |
குடும்பத்தினர் | ஜோன் கோப்லாண்ட் (சகோதரி) கெர்மிட் மில்லர் (சகோதரன்) ரெபெக்கா மில்லர் (மகள்) தானியல் மில்லர் (மகன்) தானியல் டே-லெவிஸ் (மருமகன்) |
கையொப்பம் | |
மில்லர் எப்போதும் செய்திகளில், குறிப்பாக 1940களின் பிந்தைய ஆண்டுகள், 1950கள் மற்றும் துவக்க 1960களில், அடிபட்டார்; இந்தக் காலத்தில்தான் அவர் அமெரிக்க கீழவையின் அமெரிக்கத்தனமல்லாதச் செயல்களுக்கான குழுவினால் விசாரிக்கப்பட்டார், புலிட்சர் பரிசு வென்றார், அஸ்துரியாஸ் இளவரசர் விருது பெற்றார் மற்றும் ஹாலிவுட் நடிகை மர்லின் மன்றோவை மணந்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Death of a playwright: legend Arthur Miller dies aged 89, பெப்ரவரி 11, 2005 த கார்டியனில் வந்த இரங்கியல் குறிப்பு
- ↑ "Arthur Miller Files". University of Michigan. பார்க்கப்பட்ட நாள் 2006-10-01.
வெளி இணைப்புகள்
தொகு- Arthur Miller திறந்த ஆவணத் திட்டத்தில்
- Arthur Miller Society, including a chronology
- A Visit With Castro – Miller's article in The Nation, January 12, 2004
- Joyce Carol Oates on Arthur Miller பரணிடப்பட்டது 2011-05-04 at the வந்தவழி இயந்திரம்
|
|