ஆர்னெசைட்டு

ஆர்சனேட்டு கனிமம்

ஆர்னெசைட்டு (Hörnesite) என்பது Mg3(AsO4)2·8H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். மக்னீசியத்தைக் கொண்டிருக்கும் ஆர்சனேட்டு கனிமமாக இது வகைப்படுத்தப்படுகிறது. விவியனைட்டு கனிமக் குழுவில் இது உறுப்பினராக உள்ளது. மேலும் இக்கனிமம் அன்னாபெர்கைட்டு அல்லது எரித்ரைட்டில் முடிவடையும் மக்னீசியத்திற்குப் பதிலாக நிக்கல் அல்லது கோபால்ட்டு தனிமத்தைக் கொண்ட கனிமத் தொடரின் மெக்னீசியம் முனைப்புள்ளியை உருவாக்குகிறது.

ஆர்னெசைட்டு
Hörnesite
பொதுவானாவை
வகைஆர்சனேட்டு கனிமம்
வேதி வாய்பாடுMg3(AsO4)2·8H2O
இனங்காணல்
படிக அமைப்புஒற்றைச்சரிவச்சு
மேற்கோள்கள்[1]

மேற்கோள்கள்

தொகு
  1. Page Hörnesite: Mineral information, data and localities on "mindat.org". Hudson Institute of Mineralogy. பார்க்கப்பட்ட நாள் 2024-10-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்னெசைட்டு&oldid=4145518" இலிருந்து மீள்விக்கப்பட்டது