ஆர்வர்டு மார்க் I

ஆர்வர்டு மார்க் I என்ற கணினி ஐபிஎம் நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்டு ஆர்வர்டு பல்கலைக்கழகத்திற்கு பெப்ரவரி 1944இல் அனுப்பப்பட்ட மின்-இயந்திரக் கணினி ஆகும். முதலில் ஐபிஎம் தானியக்க வரிசையால் கட்டுப்படுத்தப்படும் கணக்குப்பொறி (Automatic Sequence Controlled Calculator, ASCC), என்றழைக்கப்பட்ட இதனை மார்க் I என்று ஹார்வர்டு பல்கலைக்கழகம் பெயரிட்டது.[1]

ஆர்வர்டு-ஐபிஎம் மார்க் 1 கணினியின் இடது பகுதி
வலது பகுதி
உள்ளீடு/வெளியீடு மற்றும் கட்டுப்பாட்டின் விவரங்கள்

மின்னனியல் இயந்திரப்பொறி கணினியான இதனை அவார்டு அயிக்கன் வடிவமைத்தார். இது ஐக்கிய அமெரிக்க கடற்படையின் கப்பல்கள் பிரிவினால் மே, 1944இல் பயன்படுத்தப்பட்டது. பின்னர் பல்கலைக்கழகத்திற்கு அலுவல்முறையாக ஆகத்து 7, 1944இல் வழங்கப்பட்டது.

குறிப்புகள்தொகு

  1. ஆனால் கணினி வன்பொருள் மீது பொறிக்கப்பட்டுள்ள பெயர் அயிக்கன்-ஐபிஎம் தானியக்க வரிசையால் கட்டுப்படுத்தப்படும் கணக்குப்பொறி மார்க் I என்பதாகும். அக்காலத்தில் எடுக்கப்பட்ட ஒளிப்படமொன்றில் (Wilkes 1956:16 figure 1-7) ஐபிஎம் தானியக்க வரிசையால் கட்டுப்படுத்தப்படும் கணக்குப்பொறி எனக் காணப்படுகிறது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்வர்டு_மார்க்_I&oldid=1570862" இருந்து மீள்விக்கப்பட்டது