ஆர். இந்திரகுமாரி
ஆர். இந்திரகுமாரி (R. Indira Kumari-பிறப்பு 1950-இறப்பு 15 ஏப்ரல் 2024) என்பவர் ஒரு இந்திய அரசியலவாதி மற்றும் முன்னாள் தமிழக அமைச்சராவார். இவர் தமிழக சட்டமன்றத்துக்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நாட்ராம்பள்ளி தொகுதியில் இருந்து 1991 தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இவர் ஜெ. ஜெயலலிதா தலைமையிலான அரசில் சமூக நலத்துறை அமைச்சராக 1991 முதல் 96 வரை பொறுப்பு வகித்தார். இவர் 2006இல் தி.மு.க வில் இணைந்தார்.[2][3]
ஆர். இந்திரகுமாரி | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர் தமிழ்நாடு சட்டமன்றம் | |
பதவியில் 1991–1996 | |
முன்னையவர் | ஆர். மகேந்திரன் |
பின்னவர் | ஆர். மகேந்திரன் |
தொகுதி | நாட்ராம்பள்ளி |
சமூக நலத்துறை அமைச்சர் | |
பதவியில் 1991–1996 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 50 |
இறப்பு | 15 ஏப்ரல் 2024 |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் |
பிற அரசியல் தொடர்புகள் | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
தொழில் | அரசியல்வாதி |
ஊழல் வழக்கில் சிறை தண்டனை
தொகு1991-96 காலகட்டத்தில் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் சமூக நலத் துறை அமைச்சராக இந்திராகுமாரி இருந்த போது அவர் மீது 1997-இல் பள்ளி மாணவர்களுக்கான இலவசப் பொருட்களை வாங்கியதில் ஊழல் செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் இந்திராகுமாரிக்கு 29 செப்டம்பர் 2021 அன்று 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. [4][5]
இறப்பு
தொகுஇந்திரகுமாரி வயது முதுமையின காரணமாக ஏற்பட்ட உடல் நலக்குறைவினால் 15 சனவரி 2024 அன்று சென்னையில் காலமானார்.[6][7]
மேற்கோள்கள்
தொகு- ↑ "1991 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2016-01-31.
- ↑ Scam Count
- ↑ Chennai Corner
- ↑ அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் இந்திர குமாரி மற்றும் கணவருக்கு ஊழல் வழக்கில் 5 ஆண்டு சிறை
- ↑ ஊழல் வழக்கு : அதிமுக முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி குற்றவாளி என தீர்ப்பு
- ↑ The Hindu (15 April 2024). "Former Minister Indira Kumari is no more" (in en-IN) இம் மூலத்தில் இருந்து 16 April 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240416045020/https://www.thehindu.com/news/national/tamil-nadu/former-minister-indira-kumari-is-no-more/article68069408.ece.
- ↑ "முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி காலமானார்". Daily Thanthi. 15 April 2024. https://www.dailythanthi.com/News/State/former-minister-indira-kumari-passed-away-1101800.