ஆர். எம். நௌசாத்

ஆர். எம். நௌசாத் (பிறப்பு: செப்டம்பர் 5, 1960) இலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த கவிஞரும், சிறுகதை, புதின எழுத்தாளரும் ஆவார். தீரன் என்ற புனைபெயரிலும் எழுதுபவர்.[1]

ஆர். எம். நௌசாத்
பிறப்பு5 செப்டம்பர் 1960 (1960-09-05) (அகவை 64)
சாய்ந்தமருது, அம்பாறை மாவட்டம், இலங்கை
இருப்பிடம்சாய்ந்தமருது
தேசியம்இலங்கையர்
மற்ற பெயர்கள்தீரன்
அறியப்படுவதுஎழுத்தாளர்
சமயம்இசுலாம்
பெற்றோர்ராசிக் காரியப்பர்,
ஹாஜரா
வாழ்க்கைத்
துணை
பாத்திமா றிபாயா
வலைத்தளம்
தீராவெளி

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

நௌசாத் சாய்ந்தமருது ஊரில் ராசிக் காரியப்பர், ஹாஜரா ஆகியோருக்குப் பிறந்தவர். அஞ்சல் அதிபராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மனைவி பெயர் பாத்திமா றிபாயா, இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். 1978 ஆம் ஆண்டு முதல் எழுதி வரும் இவர் தூது என்ற பெயரில் கவிதைச் சிற்றிதழ் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

எழுதிய நூல்கள்

தொகு
  • வல்லமை தாராயோ.. (சிறுகதைத் தொகுதி, 2000)
  • வெள்ளிவிரல் (சிறுகதைத் தொகுதி, 2011)
  • பள்ளிமுனைக் கிராமத்தின் கதை (2003)
  • வானவில்ல்லிலே ஒரு கவிதை கேளு (2005)
  • நட்டுமை (புதினம், 2009)
  • கொல்வதெழுதுதல் 90 (புதினம், 2013)
  • வக்காத்துக் குளம் (குறுநாவல். 2021 )
  • தீரதம் (சிறுகதை தொகுப்பு. 2019)
  • ஆழித்தாயே அழித்தாயே... (சுனாமி. காவியம்.2014)
  • குறு நெல். (குறும்பாக்கள்.2021)
  • அபாயா என் கறுப்பு வானம்.(கவிதைகள்..மின்நூல்..பிரதிலிபி வெளியீடு)
  • முத்திரையிடப்பட்ட மது (கவிதை தொகுதி.2022)

பரிசுகளும் விருதுகளும்

தொகு
  • நட்டுமை நாவல் காலச்சுவடு சுந்தர ராமசாமி 75 பவழவிழா இலக்கியப்போட்டியில் முதற் பரிசு பெற்றது.[1]
  • வக்காத்துக் குளம் நாவல் அக்கினிக் குஞ்சு இணையம் நடத்திய எஸ்.பொ. நினைவு நாவல் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றது.
  • வெள்ளிவிரல் சிறுகதைத் தொகுதிக்கு 2011ல் இலங்கை அரசின் தேசிய அரச சாகித்திய விருதும் கிழக்கு மாகாண சாகித்திய விருதும் கிடைத்தன.[சான்று தேவை]
  • சாகும் தலம் சிறுகதை எழுத்தாளர் சுஜாதா அறக்கட்டளை நிறுவனம் நடத்திய அறிவியல் புனைகதைப் போட்டியில் சிறப்புப் பரிசு பெற்றது.[2][3]
  • தாய் மொழி சிறுகதை ஞானம் மாசிகை நடத்திய புலோலியூர் க. சதாசிவம் நினைவுச் சிறுகதைப் போட்டியில் முதற்பரிசு பெற்றது.[சான்று தேவை]

மேற்கோள்கள்

தொகு
தளத்தில்
ஆர். எம். நௌசாத் எழுதிய
நூல்கள் உள்ளன.
  1. 1.0 1.1 Welcome To TamilAuthors.com: Welcome To TamilAuthors.com, அணுக்கம்: 26-03-2017
  2. சுஜாதா நினைவுப் புனைவு 2009 எனது பார்வையில், தேனம்மை லெக்ஷ்மணன், திண்ணை, அணுக்கம்: 26-03-2017
  3. சுஜாதா அறிவியல் புனைகதை பரிசு, ஜெயமோகன், அணுக்கம்: 27-03-2017
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._எம்._நௌசாத்&oldid=3791051" இலிருந்து மீள்விக்கப்பட்டது