ஆர். காளிதாசு
ஆர். காளிதாசு தமிழ்நாட்டின் அரசியல்வாதி ஆவார். அவர் இந்து மக்கள் கட்சியின் மாநில துணைத் தலைவராக இருந்தார்.[1]
படுகொலை
தொகு2005 ஆம் ஆண்டு ஜூன் 21 இல் பகல் ஒரு மணிக்கு காளிதாஸ் மற்றும் அவரது மகன் பாலசந்தர் ஆகியோர் மதுரை முனிச்சாலையில் சென்றனர். அவர்களை இஸ்மாயில்புரம் 8 வது தெரு சந்திப்பு அருகில் 2 பேர் கத்தி, அரிவாளுடன் வழிமறித்தனர். அருகிலிருந்த ஒரு கடைக்குள், காளிதாஸ் தப்பி ஓடினார். எனினும் காளிதாஸ் ஆயுதங்களால் தாக்கி படுகொலை செய்யப்பட்டார். கொலை செய்யப்பட்ட போது அவருக்கு 55 வயது.[1]
தீர்ப்பு
தொகுஇவ்வழக்கில் இப்ராகிம்ஷா, முகமது அனிஷ் ஆகியோருக்கு 2008 ஆகஸ்ட் 4 இல் மதுரை விரைவு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.[1] உயர்நீதிமன்றக் கிளையில் குற்றவாளிகள் மேல்முறையீடு செய்தனர். மனுதாரர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை, சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க அரசுத் தரப்பு தவறிவிட்டது என உயர்நீதிமன்றமக் கிளை தீர்ப்பு வழங்கியது.[1] மன்னர் மைதீன் என்பவர் ஜனவரி 2004ல் கொலை செய்யப்பட்டார்.[2]