ஆர். சுப்பண்ணா
இந்திய அரசியல்வாதி
ஆர். சுப்பண்ணா (R. Subbanna)(21 செப்டம்பர் 1911 - 9 ஏப்ரல் 1977) இந்தியாவின் கர்நாடகாவின் பெங்களூர் மாநகரத்தின் முதல் மாநகரத் தந்தை ஆவார்.[2]
ஆர். சுப்பண்ணா | |
---|---|
பிறப்பு | [1] பைராப்புரா, கருநாடகம் | 21 செப்டம்பர் 1911
இறப்பு | 9 ஏப்ரல் 1977 | (அகவை 65)
பெங்களூரு மாநகரத் தந்தை
தொகுபெங்களூரில் உள்ள மாநகராட்சி 1949ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதே 1949ஆம் ஆண்டு பெங்களூரின் முதல் மாநகரத் தந்தையாக ஆர். சுப்பண்ணா நியமிக்கப்பட்டார். இவரது பதவிக்காலம் ஓராண்டு மட்டுமே நீடித்தது. 1950 இல் முதல் மாநகராட்சி தேர்தல் நடத்தப்பட்டது.
பின்னணி
தொகுசுப்பண்ணா இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தொண்டராக இருந்தார். பெங்களூர் மாநில காங்கிரசில் 30 ஆண்டுகள் பணியாற்றினார்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Subbanna R". பார்க்கப்பட்ட நாள் 21 January 2021.
- ↑ "Subbanna R". kla.kar.nic.in. பார்க்கப்பட்ட நாள் 20 January 2021.