ஆர். சொக்கர்

இந்திய அரசியல்வாதி

ஆர். சொக்கர் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், விருதுநகர் தொகுதியில் இருந்து, இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், சிவகாசி தொகுதியில் இருந்து, தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) கட்சி சார்பில் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

சொக்கர் தனது  சட்டமன்ற உறுப்பினர் பதவியை ஜூன் 1, 2000 இல் ராஜினாமா செய்தார். அவரது மகன், சிரிராசு சொக்கர், 2016 மாநில சட்டமன்ற தேர்தலில், சிவகாசியில் போட்டியிட்டார்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Statistical Report on General Election 1996 for the Legislative Assembly of Tamil Nadu" (PDF). Election Commission of India. p. 9. Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2017-05-06.
  2. "Kushboo not in fray". The Hindu. 23 April 2016. http://www.thehindu.com/news/cities/chennai/kushboo-not-in-fray/article8511529.ece. பார்த்த நாள்: 2017-05-09. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._சொக்கர்&oldid=3962393" இலிருந்து மீள்விக்கப்பட்டது