ஆர். நடராஜன்
ஆர். நடராஜன், தமிழகத்தின் முக்கியமான ஓவியர்களுள் ஒருவர். இவர் பிரபல ஓவியரான கே. மாதவன் அவர்களின் மாமா மகனும், மாணவரும் ஆவார். 1960 களில் தமிழ் இதழ்களுக்கு அட்டைப்படம் வரைவது, நாடகங்களுக்கு திரைச்சீலைகள் வரைவது, சுவரோவியம் போன்றவற்றில் தேர்ச்சி பெற்றவராக இருந்தார்.
ஆர். நடராஜன் | |
---|---|
அறியப்படுவது | ஓவியம், திரைச்சீலை ஓவியம், சுவரோவியம் |
உறவினர்கள் | கே. மாதவன் |
சென்னை ராஜாஜி ஹாலில் சேரன் செங்குட்டுவன், பெரியார் ஓவியங்கள், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஆறு துணை வேந்தர் ஓவியங்கள், எம். எஸ். சுப்புலட்சுமி அவர்களின் இல்லத்தில் ராஜாஜி ஓவியம், காசி மடத்தில் மகாபெரியவர் ஓவியம் போன்றவற்றை வரைந்துள்ளார். [1]
நடராஜன் பேனா, போர்ட்ரேட், பேனர் ஓவியங்களை வரைவதில் வல்லவராக இருந்தார். இவரது ஓவியங்கள் கலைமகள், கலாவல்லி, முரசொலி, முத்தாரம், காவேரி ஆகிய இதழ்களில் அட்டைப் படமாக வந்துள்ளன. இவருடைய புகழ்பெற்ற ஓவியங்களுள் ஒன்றான புலியை முறத்தால் விரட்டும் தமிழ்பெண்ணின் ஓவியம் 1975 முரசொலி பொங்கல் மலரில் அட்டைப்படமாக வெளிவந்தது. இவரது ஓவியங்கள் பொங்கல் வாழ்த்து அட்டைகளில் வெளியிடப்பட்டன. அவற்றை சேகரித்து வைக்க கூடிய அளவுக்கு ரசிகர்கள் இருந்தார்கள்.
உடல்நலக்குறைவு
தொகு2002 ஆம் ஆண்டு ராயப்பேட்டையிலுள்ள சாம்பா பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்திற்கு ஓவியங்களை வரையும் வேலை செய்தார். அக்காலக் கட்டத்தில் நினைவிழந்து சாலையில் விழுந்தவரை காப்பாற்றி மருத்துவமனையில் சிகிச்சை செய்தனர். இதனையறிந்து நடிகர் சிவக்குமார் திருவேற்காடு உதவும் கரங்களில் சேர்த்துள்ளார்.
இறப்பு
தொகுஆர். நடராஜன் திருவேற்காடு உதவும் கரங்கள் இல்லத்தில் 29 ஆகஸ்ட் 2006 அன்று உடல்நலக்குறைவு காரணமாக இறந்தார். [2]அவருக்கு ஓவியர் சுந்தரமூர்த்தி, ஓவியர் மாருதி, ஓவியர் மணியம் செல்வம் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.