ஆர். பாலாஜி ராவ்

ஆர். பாலாஜி ராவ் (R. Balaji Rao)(1842-1896) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார். இவர் சென்னை மகாஜன சபையின் நிறுவனர் மற்றும் முதல் செயலாளர் ஆவார்.[1]

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

பாலாஜி ராவ் 1842ஆம் ஆண்டில் தஞ்சாவூர் மராத்தியர் தேசஸ்த் பிராமண குடும்பத்தில் பிறந்தார்.[2][3] தஞ்சாவூரிலும், சென்னையிலும் பள்ளி மற்றும் உயர் கல்வியைப் பெற்றார். இவர் சட்டப் படிப்பில் பட்டம் பெற்றார். தனது படிப்பை முடித்ததும், பாலாஜி ராவ் இந்தியச் சுதந்திர இயக்கத்தில் சேருவதற்கு முன்பு வழக்கறிஞராகப் பயிற்சி பெற்றார்.[4]

அரசியல் தொகு

பாலாஜி அரசியலில் சேர்ந்து சென்னை மகாஜன சபையின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார்.[1] ச. அ. சாமிநாத ஐயருடன் இந்தியத் தேசிய காங்கிரசின் முதல் அமர்வில் இவர் தஞ்சாவூரினைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.[1] செங்கல்பட்டு மாவட்ட கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காக பாலாஜி ராவ் செங்கல்பட்டு நிவாரண நிதியை நிறுவினார்.

இறப்பு தொகு

பாலாஜி ராவ் 1896இல் இறந்தார்.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 P. Yanadi Raju (2003). Rayalaseema during colonial times: a study in Indian nationalism. Northern Book Centre. பக். 139. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8172111398. 
  2. John Jeya Paul (1991). The legal profession in colonial South India. Oxford University Press. பக். 220. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0195625585. https://archive.org/details/nlsiu.340.092.pau.6475. "R. Balaji Rao, a Desastha Brahman and a family friend from Tanjore, under whom they apprenticed;" 
  3. R. Suntharalingam (1974). Politics and nationalist awakening in South India, 1852-1891. University of Arizona Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0816504474. https://archive.org/details/politicsnational0000sunt. 
  4. John Jeya Paul (1991). The legal profession in colonial South India. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0195625587. https://archive.org/details/nlsiu.340.092.pau.6475. 

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._பாலாஜி_ராவ்&oldid=3849216" இலிருந்து மீள்விக்கப்பட்டது