ஆர். பிரசாத்து

இந்திய கேலிச்சித்திர வரைஞர்

ஆர். பிரசாத்து (R. Prasad) இந்தியாவைச் சேர்ந்த ஒரு கேலிச்சித்திர வரைஞர் ஆவார். தில்லியில் இருந்து வெளிவரும் மெயில் டுடே என்ற தினசரியுடன் தொடர்புடையவராகத் திகழ்கிறார்.[1][2] மெயில் டுடே இந்தியா டுடே குழுமம் மற்றும் டெய்லி மெயில் ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக இருப்பதால், பிரசாத்தின் படைப்புகள் இந்த வெளியீடுகளில் வெளிவருகின்றன.

ஆர். பிரசாத்து
R. Prasad
பிறப்பு17 மார்ச்சு 1966 (1966-03-17) (அகவை 58)
பளை, கோட்டயம், கேரளம், இந்தியா
கல்விஇளநிலை கலை
பணிகேலிச் சித்திர வரைஞர்

ஆர் பிரசாத்து 1966 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17 ஆம் தேதி தென்னிந்தியாவின் கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள பளை கிராமத்தில் ஓர் இந்து நாயர் குடும்பத்தில் பிறந்தார். இவர் தற்போது புது தில்லியில் உள்ள சப்தர்சங் என்கிளேவு பகுதியில் வசிக்கிறார். பிரசாத்தின் கேலிச்சித்திரங்கள் பொதுவாக இந்தியாவில் இவருடைய அரசியல் நுண்ணறிவு, நகைச்சுவை மற்றும் முரண்பாட்டிற்காக பரவலாகப் பரப்பப்படுகின்றன.[1]

2010 ஆம் ஆண்டில், மெயில் டுடேயில் வெளியான பிரசாத்தின் ஆத்திரேலிய காவல்துறை தொடர்பான ஒரு கேலிச்சித்திரம் அந்நாட்டு காவல்துறை மற்றும் அரசியல் தலைவர்களிடம் சர்ச்சைக்கு உள்ளனது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Prashanth Jha. Stand-alone political cartoon is on the brink of extinction. The Hindu (New Delhi, 18 June 2013) [1]
  2. Anand Soondas & Neelabh Banerjee. Funny days, dark nights. The Times of India (20 May 2012) [2]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._பிரசாத்து&oldid=3758096" இலிருந்து மீள்விக்கப்பட்டது