ஆர். மணிமாறன் (அதிமுக)
இந்திய அரசியல்வாதி
ஆர். மணிமாறன் (R. Manimaran) என்பவர் 1977 மற்றும் 1980 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தமிழகச் சட்டமன்றத் தேர்தல்களில் திருப்பூர் தொகுதியில் இருந்து இரண்டு முறை தமிழகச் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக (அதிமுக) கட்சியின் வேட்பாளராக இருந்தார்.[1][2]