ஆர். முருகன்

இந்திய அரசியல்வாதி

இரா. முருகன் (R. Murugan) என்பார் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் 2016ஆம் ஆண்டில் அரூர் தொகுதியிலிருந்து இருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழகச் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

முதலமைச்சர் எடப்பாடி க.பழனிசாமிக்கு ஆதரவைத் திரும்பப் பெற்றதோடு, கிளர்ச்சித் தலைவர் டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்ததால், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 உறுப்பினர்களில் இவரும் ஒருவர். தமிழக சபாநாயகர் ப. தனபால் இவரைத் தகுதி நீக்கம் செய்தார்.[3][4]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._முருகன்&oldid=3347680" இலிருந்து மீள்விக்கப்பட்டது