ஆர். பிரேமதாச அரங்கம்
(ஆர் பிரேமதாச அரங்கம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஆர். பிரேமதாச அரங்கம் மேற்கு இலங்கையின் கொழும்பு மாநகரின் மாளிகாவத்தையில் அமைந்துள்ள ஒரு துடுப்பாட்ட அரங்கமாகும். 1994 ஆம் ஆண்டுக்கு முன்னதாக இவ்வரங்கம் கெத்தாராம துடுப்பாட்ட அரங்கம் என அழைக்கப்பட்டது. இன்று இவ்வரங்கம் இலங்கை துடுப்பாட்ட அணி விளையாடும் முக்கிய அரங்குகளில் ஒன்றாகும்.
கெத்தாராம துடுப்பாட்ட அரங்கம் | |
அரங்கத் தகவல் | |
---|---|
அமைவிடம் | மாளிகாவத்தை, கொழும்பு |
ஆள்கூறுகள் | 6°56′22.8″N 79°52′19.3″E / 6.939667°N 79.872028°E |
இருக்கைகள் | 35,000 |
குத்தகையாளர் | இலங்கை துடுப்பாட்டம் |
முடிவுகளின் பெயர்கள் | |
Khettarama End Scoreboard End[1][2][3] | |
பன்னாட்டுத் தகவல் | |
முதல் தேர்வு | 28 ஆகஸ்டு 1992: இலங்கை எ ஆத்திரேலியா |
கடைசித் தேர்வு | 12 September 2005: இலங்கை எ வங்காளதேசம் |
முதல் ஒநாப | 9 மார்ச் 1986: இலங்கை எ பாக்கித்தான் |
கடைசி ஒநாப | 8 பெப்ரவரி 2009: இலங்கை எ இந்தியா |
28 ஏப்ரல்l 2009 இல் உள்ள தரவு மூலம்: கிரிக்கின்போ |
முன் வரலாறு
தொகு35,000 பேருக்கு இருக்கைகளைக் கொண்ட இவ்வரங்கம் இலங்கையின் முன்னாள் அதிபர் ரணசிங்க பிரேமதாசவின் திட்டத்தின் கீழ் செய்யப்பட்டதாகும். அரங்கம் அமைக்கப்படுவதற்கு முன்னர் இப்பகுதியில் பாரிய சதுப்புநிலம் காணப்பட்டதோடு அருகே இருக்கும் கெத்தாராம கோவிலுக்கு பிக்குகள் படகு மூலமே சென்று வந்தனர். 1986 பெப்ரவரி 2 ஆம் நாள் இவ்வரங்கம் திறந்துவைக்கப்பட்டது. முதல் போட்டியில் இலங்கை 'B' அணியும் இங்கிலாந்து 'B' அணியும் விளையாடின.
மேற்கோள்கள்
தொகு- ↑ "R.Premadasa Stadium". ESPN Cricinfo. ESPN. பார்க்கப்பட்ட நாள் 29 December 2021.
- ↑ "Full Scorecard of India vs Sri Lanka 1st Test 1997 - Score Report | ESPNcricinfo.com". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 10 March 2022.
- ↑ "In pictures: R. Premadasa Stadium – February 04, 2011". Island Cricket. பார்க்கப்பட்ட நாள் 5 February 2011.