ஆறாட்டுபுழா கோவில்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஆறாட்டுபுழா கோவில் (Arattupuzha Temple) என்பது மிகவும் பழமை வாய்ந்த மற்றும் புகழ் பெற்ற ஸ்ரீ தர்மா சாஸ்தா கோவிலைக் குறிப்பதாகும், இக்கோவில் ஆறாட்டுபுழா என்ற மிகவும் அழகான கிராமத்தில், இந்தியாவில் உள்ள கேரள மாநிலத்தில், திரிச்சூர் நகரத்தில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர்கள் தொலைவில் நிலை கொண்டுள்ளது. திரிச்சூர் கொடுங்கல்லூர் சாலையில் அமைந்துள்ள தேவர் சாலை பேருந்து நிறுத்தத்தில் இருந்து கிழக்கே செல்லும் சாலையில் இரண்டு கிலோ மீட்டர் பயணம் செய்தால், நாம் இந்த அழகான கோவிலை அடையலாம்.
வரலாறு தொகு
இந்தக் கோவில் 3000 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படுகிறது. ஆண்டு தோறும் கொண்டாடப் படும் மிகவும் பழமையானதும், புராதனமானதும் ஆன மிகவும் புகழ் பெற்ற "தேவமாலா" திருவிழா இந்தக் கோவிலின் விசேஷமான திருவிழா ஆகும், அப்பொழுது ஆறாட்டுபுழாவில் அனைத்து தேவர்களும் தேவதைகளும் வந்து சங்கமிப்பதாக (கூடுவதாக) ஐதீகம்.
உலகில் உள்ள அனைத்து தேவ வடிவங்களின் தெய்வீகத்தன்மையின் சாரம் மற்றும் சக்தி இந்த ஆலயத்தின் இறைவன் உட்கிரகித்துக் கொள்கிறார். இடது கால் மடங்கி இருக்க, வலது காலும் இடது காலின் அருகே மடங்கி இருக்கும் நிலையில், மேலும் இடது கை இடது துடையில் அமைந்திருக்க, இறைவன் அமைதியான நிலையில் அமர்ந்து காணப்படுகிறார், மேலும் அவரது வலது கையில் அம்ருத கலசத்தை ஏந்தி, வலது கால் முழங்காலில் அதை தாங்கி அமர்ந்துள்ளார்.
இராமரின் மிகவும் குருவான வசிட்டரின் அவதாரமாக ஆறாட்டுபுழா கோவிலில் இருக்கும் ஈசன் கருதப்படுகிறார். வேறு எந்த இறைவன்/ இறைவியின் சன்னிதானமும் காணப்படாத மிகவும் அரிதான கோவில்களில் இது ஒன்றாகும்.