ஆறு. இராமநாதன்

ஆறு. இராமநாதன் (பிறப்பு: ஆகஸ்ட் 3, 1950) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். கடலூர் மாவட்டம் மஞ்சக் கொல்லையில் பிறந்த இவர் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். இவர் நாட்டுப்புறவியல் துறைப் பேராசிரியர், மொழிப்புலத் தலைவர், தஞ்சாவூர், தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் பதிப்புத்துறை இயக்குநர் என பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். பன்னாட்டு மாநாடுகள், கருத்தரங்குகள், செயலரங்குகள் போன்றவற்றில் பங்கேற்றிருப்பதுடன் அவற்றை பொறுப்பேற்று நடத்தவும் செய்திருக்கிறார். 34க்கும் அதிகமான நூல்களை எழுதியிருக்கிறார். இவர் எழுதிய “தமிழர் வழிபாட்டு மரபுகள்” எனும் நூல் 2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நாட்டுப்புறவியல் எனும் வகைப்பாட்டிலும், இவர் எழுதிய “தமிழர் கலை இலக்கிய மரபுகள்” எனும் நூல் 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நாட்டுப்புறவியல் எனும் வகைப்பாட்டிலும் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசினைப் பெற்றிருக்கின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆறு._இராமநாதன்&oldid=4131825" இலிருந்து மீள்விக்கப்பட்டது