ஆறு சக்கரங்கள்
மானிடர் உடலில் ஆறு சக்கரங்கள்(ஆதார மையங்கள்) உள்ளன. அவை மூலாதாரம், சுவாதிஷ்டானம்(நிராகுலம்), மனிப்பூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்கினை என்பன. துரியம் என்பது ஞானத்தின் வாயில் ஆகும். குண்டலினி யோகம் என்பது மூலாதாரத்தில் இருந்து துரியத்திற்கு உயிர் சக்தியை ஏற்றும் பயிற்சி ஆகும். சிலர் துரியம் என்ற வாயிலையும் சேர்த்து ஏழுச் சக்கரங்கள் என்பர்.
சக்கரங்கள்
தொகுசக்கரம் | குறியீடு |
---|---|
மூலாதாரம் | ஓங்காரம் |
நிராகுலம் | நிலம் |
மணிப்பூரகம் | நீர் [1] |
அனாகதம் | நெருப்பு [2] |
விசுத்தி | வளி (காற்று) |
ஆக்கினேயம் | வான் (ஆகாயம்) |
- ↑ மாலினுட வீடதுதான் நறுவிரல்லின் மேலே மாசற்ற பிறைபோலே கோட்டையாகும் மாலினுட வளையம்போல் பத்திதழதான் பத்தமு னச்சரத்தின் பயனைகேளு தாலினுட ஜனகமா முனியின்தாகந் தயங்காத நரபர்ப்பர் தண்மையாகும் ஆலினுட மங்நடுவில் பூதம் அப்பு. அதன் பீசம் வங்கென்று அறியலாமே - போகர் வைத்திய காவியம் 1000 பாடல் ௪3
- ↑ ஆமென்ற சிகாரத்தின் நெழுத்து நடுவாகும் ஆண்மையாம் பூதமதுதேயு தானாம் தேனென்ற செம்மைநிற சிவப்புமாகும் தேயுவுட பீசமது நவ்வுமாகும் ஒம் மென்ற ஒளிகோடி பானுவாகும் ருத்ரணும் ருத்ரியும் நடுவே நிற்பார் கோமென்ற அவருடைய குணமே தென்றால் கொடும் பொசிப்பு, சோம்பலோடு பயமும்தூங்கே - போகர் வயித்திய காவியம்1000 பாடல் 50