ஆறு வட்டங்கள் தேற்றம்

வடிவவியலில் ஆறு வட்டங்கள் தேற்றம் (six circles theorem) ஆறு வட்டங்களின் சங்கிலித்தொடர் ஒன்றையும் ஒரு முக்கோணத்தையும் தொடர்புபடுத்துகிறது.

முதல் வட்டத்தின் ஆரத்தை மாற்றக் கிடைக்கும் தேற்ற வடிவமைப்பின் சில எடுத்துக்காட்டுகள். கடைசியமைப்பில் வட்டங்கள் சோடிசோடியாக ஒன்றுபட்டுள்ளன.

இத்தேற்றத்தின்படி,

ஒரு ஆறு வட்ட சங்கிலித்தொடரின் ஒவ்வொரு வட்டமும் முக்கோணத்தின் இரு பக்கங்களுக்குத் தொடு வட்டங்களாகவும், வட்டத்தொடரில் அதற்கு முந்தைய வட்டத்தைத் தொட்டுக்கொண்டும் அமையும். இந்த வட்டத்தொடர் முடிவுறும் தொடராகும். அதாவது, தொடரின் ஆறாவது வட்டமானது முதல் வட்டத்தைத் தொடும்.[1][2]

ஆறு வட்டங்களும் முக்கோணத்துள் அமைவதாகவும் அனைத்து தொடுபுள்ளிகளும் முக்கோணத்தின் பக்கங்களின் மீது அமைவதாகவும் எடுத்துக்கொள்ளப்படுகிறது. இதனை பொதுமைப்படுத்தி வட்டங்கள் முக்கோணத்துக்குள் இல்லாமலும் தொடுபுள்ளிகள் முக்கோணத்தின் பக்கங்களின் நீட்சிகளின் மீதும் அமையலாம் எனவும் எடுத்துக்கொண்டால், வட்டங்களின் தொடரானது காலமுறை தொடராக இருக்கும்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. Evelyn, C. J. A.; Money-Coutts, G. B.; Tyrrell, John Alfred (1974). The Seven Circles Theorem and Other New Theorems. London: Stacey International. pp. 49–58. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-9503304-0-2.
  2. Wells, David (1991). The Penguin Dictionary of Curious and Interesting Geometry. New York: Penguin Books. pp. 231. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-14-011813-6.
  3. Ivanov, Dennis; Sergei Tabachnikov (2016). "The six circles theorem revisited". American Mathematical Monthly 123 (7): 689–698. doi:10.4169/amer.math.monthly.123.7.689. 

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆறு_வட்டங்கள்_தேற்றம்&oldid=3421550" இலிருந்து மீள்விக்கப்பட்டது