ஆற்றூர் கிருஷ்ண பிசரோடி
ஆற்றூர் கிருஷ்ண பிசரோடி (Attoor Krishna Pisharody) இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த சமசுகிருத அறிஞரும், ஆசிரியரும் மற்றும் எழுத்தாளரும் ஆவார். இவர் செப்டம்பர் 29,1875 அன்று திருச்சூர் மாவட்டத்தில் வடக்காஞ்சேரியில் நாராயணன் நம்பூதிரி மற்றும் பாப்பிக்குட்டி பிசராசியர் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். கொடுங்கல்லூர் கோதவர்மா பட்டன் தம்புரானிடம் இருந்து பாரம்பரிய முறையில் சமசுகிருதத்தை கற்றுக்கொண்டார். 1911 முதல் 1929 வரை திருவனந்தபுரம், மகாராஜா கல்லூரியில் (இன்றைய பல்கலைக்கழகக் கல்லூரி) கற்பித்தார். அடுத்த ஐந்து ஆண்டுகள் திருவிதாங்கூர் மகாராஜாவுக்கு சமசுகிருத ஆசிரியராக பணியாற்றினார். இவர் இரசிகா ரத்னம் மற்றும் மங்களோதயம் ஆகிய இரண்டு பத்திரிகைகளின் ஆசிரியராக இருந்தார். மேலும், ஒரு வீணைக் கலைஞராகவும், இசைக்கலைஞராகவும் இருந்தார்.
ஆற்றூர் கிருஷ்ண பிசரோடி Attoor Krishna Pisharody | |
---|---|
இயற்பெயர் | ആറ്റൂര് ക്രഷ്ണപിഷരടി |
பிறப்பு | கிருஷ்ணசந்திரன் 29 செப்டம்பர் 1875 ஆற்றூர், வடக்காஞ்சேரி |
இறப்பு | 5 சூன் 1964 திருச்சூர் | (அகவை 88)
தொழில் | ஆசிரியர், எழுத்தாளர், நாடக ஆசிரியர், இசைக்கலைஞர் |
மொழி | சமசுகிருதம், மலையாளம் |
தேசியம் | இந்தியா |
துணைவர் | நானிக்குட்டி பிசராசியர் (தி. 1900–1956) |
பிள்ளைகள் | 3 |
கிருஷ்ண பிசரோடி ஜூன் 5,1964 அன்று இறந்தார்.