ஆலத்தூர் காருடைய அய்யனார் கோயில்
ஆலத்தூர் காருடைய அய்யனார் கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அய்யனார் கோயிலாகும்.
அமைவிடம்
தொகுஇக்கோயில் பட்டுகோட்டைக்குவட கிழக்கில் 10 கிமீ தொலைவிலும், மதுக்கூருக்கு மேற்கில் 8 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. இக்கோயிலை வீரனார் மற்றும் அய்யனார் கோயில் என்றும் கூறுகின்றனர். [1]
இறைவன், இறைவி
தொகுஇங்குள்ள இறைவனான அய்யனார் பூர்ண, புஷ்கலையுடன் உள்ளார். இவர் ஆலப்பெருகும் அய்யனார் என்றும் அழைக்கப்படுகிறார். அன்னை திருமேனியம்மன் என்றழைக்கப்படுகிறார். வீரனார் தீர்த்தம் இக்கோயிலின் அருகே உள்ளது. [1]
விழாக்கள்
தொகுஇக்கோயிலில் சித்திரா பௌர்ணமி திருவிழா 10 நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. தேரோட்டம், காவடி, அக்னிக் கொப்பரை ஏந்துதல் போன்ற சிறப்பு விழாக்களும் இக்கோயிலில் நடைபெறுகின்றன.[1]