ஆலனியா ஆறு

இந்திய ஆறு

ஆலனியா ஆறு (Aalaniya River) இந்திய மாநிலமான இராசத்தானில் உள்ள சம்பல் ஆற்றின் துணை ஆறாகும். இது முகுந்துவாரா மலைகளில் இருந்து தோன்றுகிறது. கோட்டா மாவட்டத்தின் லாத்புரா, தாலுக்காவிலுள்ள நோட்னா கிராமத்தில் சம்பல் நதியுடன் இணைவதற்கு முன்பு 75 கிலோமீட்டர் (47 மைல்) தொலைவிற்குப் பாய்கிறது. ஆலனியா ஆறு ஒரு வற்றாத நதியாகும், மேலும் இப்பகுதியில் நீர்ப்பாசனம் மற்றும் குடிநீருக்கான முக்கிய நீர் ஆதாரமுமாகும்.[1][2][3]

ஆலனியா ஆறு
Alania River
அமைவு
நாடுஇந்தியா
மாநிலம்இராசத்தான்
சிறப்புக்கூறுகள்
மூலம்முகுந்துவாரா மலைகள்
முகத்துவாரம்சம்பல் ஆறு, லட்புரா, கோட்டா
நீளம்75 km (47 mi)
வடிநில அளவு1,150 சதுர கிலோமீட்டர்கள் (440 sq mi)

முதலைகள், ஆமைகள் மற்றும் மீன்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு ஆலனியா நதி இருப்பிடமாக உள்ளது. மீன்பிடித்தல் மற்றும் படகு சவாரி ஆகியவற்றிற்கும் இந்த நதி ஒரு பிரபலமான இடமாகும்.

ஆலனியா நதி இராசதான் மக்களுக்கு ஒரு முக்கியமான இயற்கை வளமாகும். நீர்ப்பாசனம், குடிநீர் மற்றும் பொழுதுபோக்குவதற்கான தண்ணீரை வழங்குகிறது. மேலும் இந்த நதி பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கும் இருப்பிடமாக உள்ளது. எதிர்கால சந்ததியினரின் நலனுக்காக ஆலனியா நதியையும் அதன் சுற்றுச்சூழல் அமைப்பையும் பாதுகாப்பது முக்கியம்.

மேற்கோள்கள்

தொகு
  1. Jain, Sharad K.; Agarwal, Pushpendra K.; Singh, Vijay P. (2007-05-16). Hydrology and Water Resources of India (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 352. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4020-5180-7.
  2. Sustainable Development of Water and Energy Resources: Energy (in ஆங்கிலம்). Central Board of Irrigation and Power. 2000. p. 2.
  3. The Indian Forester (in ஆங்கிலம்). R. P. Sharma, Business Manager, Indian Forester. 1970. p. 506.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலனியா_ஆறு&oldid=4063126" இலிருந்து மீள்விக்கப்பட்டது