ஆலன்கள்

பண்டைய ஈரானிய மக்கள்

ஆலன்கள் (Alans) என்பவர்கள் பண்டைய மற்றும் நடுக்கால ஈரானிய நாடோடி மக்கள் ஆவர்.[1][2] இவர்கள் கிழக்கு ஈரானிய மொழியை பேசினர். ஆரியன் என்ற வார்த்தையே ஈரானிய மொழியில் மருவி ஆலன் என்றானது.[1][2][1][2][3][4][5] நவீன வரலாற்றாளர்கள் ஆலன்களை சீன ஆதாரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள நடு ஆசிய யாங்கை மற்றும் உரோமானிய ஆதாரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஆவோர்சி ஆகியோருடன் தொடர்புபடுத்துகின்றனர்.[6] மேற்கு நோக்கி இடம்பெயர்ந்த இவர்கள் பான்டிக்-காசுப்பியன் புல்வெளியில் இருந்த சார்மடியர்களில் முக்கியமானவர்களாக ஆயினர். கி.பி. 1ஆம் நூற்றாண்டு உரோமானிய நூல்களில் ஆலன்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர்.[1][2] அந்நேரத்தில் கருங்கடலுக்கு வடக்கில் இருந்த பகுதியில் இவர்கள் வாழ ஆரம்பித்தனர். பார்தியப் பேரரசு மற்றும் உரோமானியப் பேரரசின் காக்கேசிய மாகாணங்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தினர். கி.பி. 215-250 முதல் கோத்துகள் பான்டிக் புல்வெளி மீது ஆலன்கள் செலுத்திய சக்தியை உடைத்தனர்.[7][4]

உசாத்துணைகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலன்கள்&oldid=3532606" இலிருந்து மீள்விக்கப்பட்டது