ஆலன்-மில்லர்-திரிப்பெட் மறுசீராக்கல் வினை

ஆலன்-மில்லர்-திரிப்பெட் மறுசீராக்கல் வினை (Allen–Millar–Trippett rearrangement) என்பது ஒரு வளைய பாசுப்பீனை வளைய பாசுபீன் ஆக்சைடு சேர்மமாக மாற்றும் வளைய விரிவாக்க வினையாகும். 1960 ஆம் ஆண்டில் டேவிட் டபிள்யூ ஆலென், இயான் டி. மில்லர், சுடுவர்டு திரிப்பெட் மூவரும் சேர்ந்து கண்டறிந்தனர். இதற்காக இவர்கள் பாசுபரசை ஆல்க்கைலேற்றம் அல்லது அசைலேற்றம் செய்து தொடர்ந்து உருவாகும் விளைபொருளுடன் ஐதராக்சைடைச் சேர்த்து மறு சீரமைப்பு விளைபொருளை உருவாக்கினார்கள்[1]. முதலில் பாசுபோனியம் அணுவை ஐதராக்சைடு தாக்குகிறது. இதனைத் தொடர்ந்து பாசுபீன் ஆக்சைடாக நிலை குலைந்து உருவாகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. Hassner, Alfred; Stumer, C. (2002). "Allen–Millar–Trippett Phosphonium Rearrangement". Organic Syntheses Based on Name Reactions. Elsevier. p. 5. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780080513348.