அசைலேற்றம்
வேதியியலில் அசைலேற்றம் (Acylation) அல்லது பொதுவாக ஆல்கனாயிலேற்றம் (alkanoylation) எனப்படுவது ஒரு சேர்மத்துடன் அசைல் தொகுதியை சேர்க்கும் செயல்முறையைக் குறிப்பதாகும். அசைல் தொகுதியைக் கொடுக்கும் சேர்மம் "அசைலேற்றி" (acylating agent) எனப்படும்.
ஏனெனில் அவை உலோக வினைவேக மாற்றிகளுடன் வினை புரிந்து வலுவான இலத்திரன் கவரிகளாக உருவாகின்றன. பொதுவாக அசைல் ஆலைடுகள் அசைலேற்றிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக, பிரீடல் கிராப்ட்சு அசைலேற்றத்தில் அசிட்டைல் குளோரைடு (எத்தனாயில் குளோரைடு) CH3COCl அசைலேற்றியாகவும், அலுமினியம் குளோரைடு (AlCl3) வினைவேக மாற்றியாகவும் பயன்படுகின்றன. இவ்வினையில் எத்தனாயில் (அசிட்டைல்) தொகுதி பென்சீனுடன் சேர்கிறது.
இவ்வினையின் வினைவழிமுறை மின்கவர் அரோமாட்டிக் பதிலீட்டுவினையாகும்
அமீன்களை அமைடுகளாகவும், ஆல்ககால்களை எசுத்தர்களாகவும் அசைலேற்றம் செய்ய அசைல் ஆலைடுகள் மற்றும் கார்பாக்சிலிக் அமிலங்களின் அமில நீரிலிகள் கூட பொதுவாக அசைலேற்றிகளாகப் பயன்படுத்தப்படுவதுண்டு. அமீன்கள் மற்றும் ஆல்ககால்கள் போன்றவை மின்னணு மிகுபொருட்களாகும். எனவே இவ்வினையின் வினை வழிமுறை கருநாட்டப் பதிலீட்டு வினையாகும். சக்சினிக் அமிலமும் குறிப்பிட்ட சிலவகை அசைலேற்ற வினைகளுக்கு அதாவது சக்சினிக்கேற்றம் போன்ற வினைகளுக்கு அசைலேற்றியாகப் பயன்படுத்தப்படுகிறது. இவ்வினையின் போது ஒன்றுக்கு மேற்பட்ட சக்சினேட்டுகள் ஒரு தனி சேர்மத்துடன் சேர்கின்றன.
உயிரியலில் அசைலேற்றம்
தொகுஅசைல் பிணைப்புக்கள் மூலம் செயல்பாட்டு குழுக்கள் புரதத்துடன் இணைக்கப்படும் புரதப் பெயர்ப்பிற்கு பின்னான புரத அசைலேற்றம் எனப்படுகிறது. அமினோ அமிலங்களுடன் கொழுப்பு அமிலங்கள் இணைகின்ற வினை அவற்றுள் முக்கியமான வினையாகும்.[1]. புரத அசைலேற்றவினை ஒரு உயிரியற் குறியீட்டு வழிமுறையாகக் கருதப்படுகிறது [2].
இவற்றையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Resh, M. D. (1999). "Fatty acylation of proteins: New insights into membrane targeting of myristoylated and palmitoylated proteins". Biochimica et Biophysica Acta 1451 (1): 1–16. doi:10.1016/S0167-4889(99)00075-0. பப்மெட்:10446384.
- ↑ எஆசு:10.1146/annurev.bi.57.070188.000441
This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand