ஆலன் அமீன்
ஆலன் அமீன் (Allan Amin) இந்தியா பாலிவுட், டோலிவுட் மற்றும் மாலிவுட் திரைப்பட நடிகர் மற்றும் சண்டைக்காட்சி இயக்குனர் (Stunt) ஆவார்.[1] 2001, 2004 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் மிசன் காசுமீர் (Mission Kashmir) (2000), கயாமத்ஃ சிட்டி அண்டர் த்ரெட் (Qayamat: City Unter Threat) (2003) மற்றும் டஸ் (Dus) (2005) ஆகிய திரைப்படங்களில் நடித்ததற்காக சிறந்த நடிப்புக்கான ஃபிலிம் ஃபேர் விருதைப் பெற்றார்.[2] 2018 ஆம் ஆண்டில் சக்கா சாசூசு (Jagga Jasoos)(2017) திரைப்படத்திற்காக ஃபிலிம் ஃபேர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். 'சண்டைக் காட்சிகளை சொந்தமாக செய்ய விரும்பும் அனைத்து கலைஞர்களுக்கும் பயிற்சி அவசியம்' என்று சண்டைக் காட்சி இயக்குனர் ஆலன் கூறுகிறார்.[3]
ஆரம்பகால வாழ்க்கை
தொகுஆலன் அமீன் மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பையில் பிறந்தார். இவரது தந்தை அமீன் காசி (Amin Gazi) ஆவார் மேலும் இவரும் பாலிவுட்டில் ஒரு பிரபல சண்டைக்காட்சி இயக்குநர் ஆவார். ஆலன் தனது தந்தையின் வேலையைப் பார்த்து இவரும் சண்டைக்காட்சிகளை அமைக்கும் முறைகளில் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார்.[4]
தொழில்
தொகுஃபரா கான் இயக்கத்தில், சாருக் கான் நடித்து, 2004 இல் வெளியான மைன் ஹூன் ந என்ற திரைப்படத்தில் ஆலன் உருவாக்கிய சண்டைக் காட்சிகள் பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றது.[5]
விருதுகள்
தொகுஆலன் அமீன் 6 விருதுகளை வென்றுள்ளார். மிசன் காசுமீர் (Mission Kashmir) என்ற திரைப்படத்தில் பணியாற்றிமைக்காக 2001 இல் ஃபிலிம் ஃபேர் விருதையும், கயாமத்ஃ சிட்டி அண்டர் த்ரெட் (Qayamat: City Unter Threat) என்ற திரைப்படத்தில் பணியாற்றிமைக்காக 2004 இல் ஃபிலிம் ஃபேர் விருதையும், டஸ் (Dus) என்ற திரைப்படத்தில் பணியாற்றிமைக்காக 2006 இல் ஃபிலிம் ஃபேர் விருதையும், கம்பெனி என்ற திரைப்படத்தில் பணியாற்றிமைக்காக 2003 இல் ஐஐஎஃப் (IIFA) என்ற விருதையும், தூம் என்ற திரைப்படத்தில் பணியாற்றிமைக்காக 2005 இல் ஐஐஎஃப் (IIFA) விருதையும், டஸ் (Dus) என்ற திரைப்படத்தில் பணியாற்றிமைக்காக 2006 இல் ஐஐஎஃப் (IIFA) விருதுதையும் பெற்றார்.[6]
திரைப்படங்கள்
தொகுஆண்டு | திரைப்படம் | இயக்குநர் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
2023 | யாரியன் 2 | ராதிகா ராவ் மற்றும் விநயன் |
இந்தி | |
2018 | காயங்குளம் கொச்சுண்ணி | ரோசன் ஆன்ட்ரே | மலையாளம் | |
2017 | பாஸ் 2 | பாபா யாதவ் | இந்தி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Allan Amin". Times of India. பார்க்கப்பட்ட நாள் 2023-10-13.
- ↑ "Filmfare proves that Black is beautiful". Sify. Archived from the original on 19 June 2006. பார்க்கப்பட்ட நாள் 6 July 2010.
- ↑ "Bollywood's stunt queens gear up for next-level action". Times of India. 2021-04-03. பார்க்கப்பட்ட நாள் 2024-10-13.
- ↑ Austin, Austin (2024-08-09). "Allan Amin Age, Height, Spouse, Family, Wiki & Facts". Telugutitans.com. பார்க்கப்பட்ட நாள் 2024-10-13.
- ↑ "Main Hoona Na action director Allan Amin says he put Shah Rukh Khan on cable, hung him from helicopter: 'They used special effects in Jawan, Pathaan'". Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2024-10-14.
- ↑ "Allan Amin". Times of India. பார்க்கப்பட்ட நாள் 2023-10-13.