ஆலன் பாட்டன்
வார்ப்புரு:Apartheid Alan Stewart Paton (11 January 1903 – 12 April 1988) was a South African author and anti-apartheid activist.
Alan Paton | |
---|---|
Alan Paton | |
பிறப்பு | [1] Pietermaritzburg, Natal Province | 11 சனவரி 1903
இறப்பு | 12 ஏப்ரல் 1988 டர்பன், Natal[2] | (அகவை 85)
தொழில் |
|
மொழி | English |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | Cry, the Beloved Country; Too Late the Pharlarope |
துணைவர்கள் | Dorrie Francis Lusted, 1928–1967 Anne Hopkins, 1969–1988[3] |
பிள்ளைகள் | Jonathan, David |
ஆலன் ஸ்டீவர்டு பாடன் (11 ஜனவாி 1903 - 12 ஏப்ரல் 1988) ஒரு தென்னாப்பிாிக்க எழுத்தாளர். இவர் ஒரு இனவெறிக்கு எதிரான போராளி.
குடும்பம் (தொகு)
தொகுபாடன், பீட்டர் மாரிட்ஸ்பெர்க்-ல் நாட்டல் மாநிலத்தில் (தற்பொழுது க்வாசுழு - நாட்டல்) பிறந்தவர். இவர் ஒரு அரசாங்க ஊழியரின் மகனாவார். மாரிட்ஸ்பெர்க் கல்லூரியில் பயின்ற பிறகு, நாட்டல் பல்கலைக்கழகத்தில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார். அதன் பிறகு கல்வியியலில் பட்டப் படிப்பை முடித்தார். பட்டம் பெற்ற பிறகு, பாடன் ஆசிரியராக ல்சோபோ பள்ளியிலும், அதனைத் தொடர்ந்து நாட்டல் பல்கலைக் கழகத்திலும் பணியாற்றினார். ல்சோாபோ பள்ளியில் பணியாற்றும்போது டோரி பிரான்சிஸ் லஸ்டட் என்பவரைச் சந்தித்தார். 1928-ல் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். 1967-ல் அவருடைய மனைவி நுரையீரல் நோயால் இறக்கும் வரை இருவரும் ஒன்றாகவே வாழ்ந்தனர். தங்கள் வாழ்க்கையை தன்னுடைய நூலான "கன்டாகியன் ஃபார் யூ டிபார்டட்"-ல் ஆவணமாக 1969-ல் வெளியிட்டார்.இவர்களுக்கு ஜானத்தன்,டேவிட் என்ற இருமகன்கள் . அதன்பிறகு பாடன், ஆன் ஹாப்கின்சை திருமனம் செய்துகொன்டார்.பாடன் இறக்கும் வரை ஆனுடன் வாழ்ந்தார்.
முந்தைய வாழ்க்கைநிலை
தொகுஇவர் 1935 முதல் 1949 வரை கருப்பு ஆப்பிரிக்கர்களுக்கான டைப்லூஃப் சீர்திருத்தப் பள்ளியில் தலைமையாசிரியாராகப் பணியாற்றினார்.அங்கு அப்பள்ளியை சீர்திருத்துவதற்காக மறுமலர்ச்சிக் கொள்கைகளை அறிமுகப்படுத்தினார்.அவற்றுள் மூடப்பட்ட அறைக்குப் பதிலாக திறந்த தூங்கும் அறைகளையும்,வேலை செய்ய அனுமதியும்,வீட்டிற்குச் சென்று வருவதற்குஅனுமதியும் வழங்கினார்.நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்குபவர்க்கே திறந்த துயில் அறையும் வெளியில் சென்று வேலைபார்ப்பதற்கு அனுமதியும் வழங்கப்பட்டது.ஒருசிலருக்கு அவர்களுடைய குடிம்பதினரின் கண்காணிப்பில் வெளியில் சென்று தங்கவும் அனுமதிக்கப்பட்டது.இவருடைய பணிக்காலத்தில் அங்கு தங்கியிருக்கும் 10,000 பேரில்5%-க்கும் குறைவான பேருக்கு வீட்டிற்கு செல்ல விடுமுறை வழங்கப்பட்டது.அதில் ஒருவர்கூட திரும்பிவராமல் இருந்ததில்லை.அனைவரும் தன்மீது வைத்திருந்த நம்பிக்கையை காப்பாற்றினர்.
பிந்தைய வாழ்க்கைநிலை
தொகுபாடன்,இரண்டாம் உலகப்போரின் போது தன்னார்வமாக பணிசெய்ய வந்தார்.ஆனால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.போருக்குப்பிறகு,தன் சொந்த செலவில் ஸ்கேன்டினேவியா,இங்கிலாந்து,ஐரோப்பா கண்டம்,கனடா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். நார்வே-யில் இருக்கும்போது இவருடைய புதினம் "க்ரை,தி பிலவுட் கன்ட்ரி"[cry,the Beloved Country]-யைஎழுதத் தொடங்கினார்.1946-ல்சான் பிரான்சிஸ்கோ-வில் கிருஸ்துமஸ் நாளுக்குமுந்தைய நாள் அப்புதினத்தை எழுதி முடித்தார்.அங்கு,ஆலன் ஆபரே மற்றும் மாரிகோல்டு பர்ன்ஸ் ஆகிய இருவரையும் சந்தித்தார்.அவர்கள் இப்புதினத்தின் கையெழுத்துப் பிரதியைப் படித்துவிட்டு,இப்புதினத்தை புத்தகமாக வெளியீட்டாளரின் பெயர் மேக்ஸ்வெல் பர்கின்ஸ்.இவர்,ஏனஸ்ட் ஹெம்மிங்வே மற்றும் தாமஸ் வுல்ஃப் போன்றோரின் படைப்புகளைத் தொகுத்த பெருமைக்குரியவர்.பாடனின் முதல் புதினத்தை ஸ்கிரிப்னுடன் சேர்ந்து வெளியிட இவர் உதவினார்.பாடன் 1950-களில் பல புத்தகங்களை வெளியிட்டார்.அப்புத்தகங்கள் நன்கு விற்பனையானதால்,பாடன் செல்வந்த்ரானார்.
தீண்டாமை எதிர்ப்பு
தொகு1948-ல்பாடனின் புதினம் "க்ரை,தி பிலவுட் கன்ட்ரி"[Cry,the Beloved Country] வெளியிடப்பட்ட நான்கு மாதத்திற்குள் பிரிவினைவாத கட்சி தென்னாப்பிரிக்காவில் ஆட்சிக்கு வந்தது. 1953-ல் பாடன் தென்னாப்பிரிக்காவில் முற்போக்குக் கட்சியை நிருவினார். இக்கட்சி பிரிவினைவாதக் கட்சியால் அறிமுகப்படுத்தப்பட்ட தீண்டாமையை எதிர்த்துப் போராடியது. 1960-ல் தீண்டாமை ஒழிப்புக்கட்சியால் இவ்வாட்சி கலைக்கப்படும் வரை, பாடன் தென்னாப்பிரிக்காவின் முற்போக்குக் கட்சியின் தலைவராக இருந்தார். கறுப்பர் மற்றும் வெள்ளை இனம் ஆகிய இருஇனத்தவரும் இக்கட்சியில் உறுப்பினராக இருந்ததால் ஏற்பட்ட பிரச்சனையால் இக்கட்சி கலைக்கப்பட்டது. பாடன்,முற்போக்குக் கட்சியின் நிறுவனரான பெர்னார்ட் ஃபிரைட்மேன்-ன் நண்பராவார்.பாடனின் எழுத்துத்துறை நண்பரான லாரன்ஸ் வான் டர் போஸ்ட் 1930-ல் இங்கிலாந்திற்குச் சென்று, அங்கிருந்துகொண்டு இக்கட்சி வளர பலவழிகளில் உதவினார். தென்னாப்பிரிக்கா இரகசிய காவல்துறைக்கு வன் டர் போஸ்ட் இக்கட்சிக்கு பொருளாதார உதவி செய்வது தெரிந்தது. ஆனால் சட்டத்தால் இவரைத் தடுக்க முடியவில்லை. இக்கட்சியிலுள்ள மற்றவர்களைப் போலவே, பாடனும் அமைதியான வழியில் தீண்டாமையை எதிர்த்தார். ஆனால் ஒரு சிலர் தீவிரவாத வழியில் ஈடுபட்டனர். அதன்காரணமாக கட்சிக்கு அவப்பெயர் ஏற்பட்டது. 1960-ல் நியூயார்க்கிலிருந்து திரும்பி வரும்பொழுது பாடனின் கடவுச்சீட்டு பறிமுதல் செய்யப்பட்டது. முன்பு நியூயார்க்கில் தான் அவருக்கு வருடாந்திர சுதந்திர விருது[Annual Freedom Award]வழங்கப்பட்டது. இவருடைய கடவுச்சீட்டு பத்து வருடங்களாகத் திருப்பிக் கொடுக்கப்படவில்லை.
தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்
தொகு- Cry, The Beloved Country, 1948 – made into a film in 1951, directed by Zoltan Korda with a screenplay by Paton himself; in 1995, directed by Darrell Roodt; also a musical and an opera
- Lost in the Stars 1950 – a musical based on the above work (book and lyrics by Maxwell Anderson, music by Kurt Weill)
- Too Late the Phalarope, 1953
- The Land and People of South Africa, 1955
- South Africa in Transition, 1956
- Debbie Go Home, 1960
- Tales from a Troubled Land, 1961
- Hofmeyr, 1964
- South African Tragedy, 1965
- Sponono, 1965 (with Krishna Shah)
- The Long View, 1967
- Instrument of Thy Peace, 1968
- Kontakion For You Departed, 1969 (also: For You Departed)
- D. C. S. Oosthuizen Memorial Lecture, 1970
- Case History of a Pinky, 1972
- Apartheid and the Archbishop: the Life and Times of Geoffrey Clayton, Archbishop of Cape Town, 1973
- Knocking on the Door, 1975
- Towards the Mountain, 1980
- Ah, but Your Land is Beautiful, 1981
- Journey Continued: An Autobiography, 1988
- Save the Beloved Country, 1989
- The Hero of Currie Road: the complete short pieces, 2008[4]
மேலும் பார்க்க
தொகு- Liberalism
- Contributions to liberal theory
- List of African writers
- List of South Africans – In 2004 Paton was voted 59th in the SABC3's Great South Africans
குறிப்புகள்
தொகு- ↑ Paton, Alan (1988). Journey Continued: An Autobiography. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். p. 2. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780192192370.
- ↑ "Alan Stewart Paton". South African History Online. பார்க்கப்பட்ட நாள் 14 June 2015.
- ↑ Paton, Alan (1988). Journey Continued: An Autobiography. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். p. 151. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780192192370.
- ↑ "Umuzi – The Hero of Currie Road – Detail Page". Umuzi-randomhouse.co.za. 27 May 2008. Archived from the original on 27 December 2008. பார்க்கப்பட்ட நாள் 13 May 2010.
மேலும் படிக்க
தொகு- Holland, Roy (2008). Alan Paton Speaking. Clashnessie, SCO, UK: Diadem Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-9559741-4-4. 116 pp.
- Paton, Anne (1992), Some Sort of a Job: My Life with Alan Paton, ZA: Penguin, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-67083969-8.
மேற்கோள்கள்
தொகு- The Alan Paton Centre & Struggle Archives
- Alan Paton — A short biography and bibliography பரணிடப்பட்டது 2005-04-03 at the வந்தவழி இயந்திரம்
- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் Cry the Beloved Country
- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் Cry the Beloved Country
- A mixture of ice and fulfilled desire, Mail & Guardian, 14 November 2005
வார்ப்புரு:Alan Paton navbox வார்ப்புரு:Liberalism in South Africa