ஆலம்பாடி பாறை ஓவியங்கள்
ஆலம்பாடி பாறை ஓவியங்கள், விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலூரில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஆலம்பாடி என்னும் இடத்தில் உள்ள பாறை ஓவியங்கள் ஆகும்.[1] ஆலம்பாடி ஊரின் மேற்குப்புறத்தில் அமைந்த இயற்கைப் பாறைகளின் மேற்பரப்பில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.[2]
இவை மான், மாடு, பன்றி போன்ற விலங்குகளைக் குறிக்கும் ஓவியங்களாகக் காணப்படுகின்றன. விலங்குகளின் உள்ளுறுப்புக்களைக் காட்டும் எக்ஸ் - கதிர் வடிவம் எனும் பாணியில் வரையப்பட்ட ஓவியங்கள் இங்கு உள்ளன. தமிழ்நாட்டிலுள்ள பாறை ஓவியங்களில் இவ்வாறான ஓவியங்கள் இவ்விடத்திலேயே முதல் முதலாகக் கண்டுபிடிக்கப்பட்டன.[3] இவ்வோவியங்கள் கோட்டுரு முறையில் வரையப்பட்டுள்ளன. இங்கு சில இடங்களில் காணப்படும் இரட்டைப் படைப் பூச்சு, பழைய ஓவியத்தின் மீது மீண்டும் கோடுகள் வரையப்பட்டதைக் காட்டுவதாகக் கருதப்படுகிறது.[4]
இது அரசின் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னம் ஆகும்.
காலம்
தொகுஇங்கே காணப்படும் ஓவியங்கள் வெவ்வேறு காலகட்டங்களைச் சேர்ந்தவை. இவற்றுள் இடைக்கற்காலம் அல்லது அதற்கு முந்திய காலப் பகுதியைச் சேர்ந்த ஓவியங்களும், புதியகற்காலம்/செப்புக்காலத்தைச் சேர்ந்த ஓவியங்களும் அடங்கும்.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "பாறை ஓவியங்கள் - ஆலம்பாடி". Archived from the original on 2021-06-23. பார்க்கப்பட்ட நாள் 2021-06-23.
- ↑ Kannan, R., 2007, p. 58
- ↑ Kannan, R., 2007, p. 58
- ↑ பவுன்துரை, இராசு., 2001, பக். 96, 97
- ↑ Kannan, R., 2007, p. 58
உசாத்துணைகள்
தொகு- பவுன்துரை, இராசு., தமிழகப் பாறை ஓவியங்கள், மெய்யப்பன் தமிழாய்வகம், சிதம்பரம், 2001.
- Kannan, R., Manual on Conservation and Restoration of Monuments, Government Museum, Chennai, 2007.