ஆலியார்
ஆலியார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர்.[1] இவரது பாடல் ஒன்றே ஒன்று சங்கப் பாடல்களில் இடம் பெற்றுள்ளது. அது புறநானூறு: 298 (கரந்தை, நெடுமொழி)
புலவர் பெயர்
தொகுமழை பெய்யும்போது மழைத்துளி கட்டி கட்டியாக விழுவதை 'ஆலி' என்பர். இப்புலவர் பெயர் இதன் அடிப்படையில் தோன்றியது எனலாம்.
பாடல்
தொகுஎமக்கே கலக்கம் தருமே தானே
தேறல் உண்ண மன்னே நன்றும்
இன்னான் மன்ற வேந்தே இனியே
தேரார் ஆர்எயில் முற்றி
வாய் மடித்து உரறி 'நீ முந்து' என்றானே
காட்சி
தொகுபோர்க்களத்தில் ஓர் காட்சி இந்தப் பாடலில் காட்டப்பட்டுள்ளது.
செய்தி
தொகுபோர்மறவன் போருக்குச் செல்லும் மகிழ்வோடு தேறல்கள்ளைப் பருகிக்கொண்டிருக்கிறான். அவனிடம் அரசன் தன் வாயை மடித்து உரறுகிறான்(=உருமுகிறான்) 'நீ முந்து' இதுதான் அரசனின் உருமல். இந்தக் காட்சியைக் கண்ட புலவர் 'அரசன் இன்னான்(=கொடியவன்)' என்று கூறிவிட்டுத், தனக்கே கலக்கம் தருவதாகக் குறிப்பிடுகிறார்.
எது நெடுமொழி
தொகுஇந்தப் பாடலில் அரசன் உரறியது நெடுமொழி அன்று. 'முந்துவேன்' என்று போர்மறவன் முன்பே நெடுமொழி கூறியிருக்கவேண்டும். அதுதான் நெடுமொழி. அதனை அறியாத அறியாது அரசன் உரறியதால்தான் புலவருக்குக் கலக்கம் வருகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ கா., கோவிந்தன் (1964). சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை - கo. மாநகர்ப் புலவர்கள் -க. (மறுபதிப்பு) (PDF). திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட். p. 18-19.