ஆலிவர் தோரே
அமெரிக்க வானியலாளர், அண்டவியலாளர்
ஆலிவர் தோரே (Olivier Doré) ஓர் அமெரிக்க வானியலாளரும் அண்டவியலாரும் ஆவார். இவர் இப்போது தாரைச் செலுத்த ஆய்வகத்தில் ஆராய்ச்சி அறிவியலாளராக பணிபுரிகிறார். மேலும் இவர் கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தின் வருகைதரு இணைநிலைப் புல வல்லுனரும் ஆவார்.[1][2]
விருதுகள்
தொகு- 2017 ஆம் ஆண்டு திசெம்பரில் அடிப்படை இயற்பியலுக்கான அருந்திறல் பரிசைப் பெற்றார்.[3]
- 2017 ஆம் ஆண்டில் யூ.சி. இர்வைன் தகவுறு வருகைதரு பேராசிரியர் ஆனார்.
- 2017 ஆம் ஆண்டில் ஒரு மாதம் மார்செயில்லி வானியற்பியல் ஆய்வகம்(Laboratoire d’Astrophysique de Marseille (LAM)), பிரான்சு அரசு மார்செயில்லி பல்களைக்கழகம்(Aix-Marseille Universit´e) ஆகியவற்றின் வருகைதரு பேராசிரியாக இருந்துள்ளார்.
- 2016 ஆம் ஆண்டு மே மாதம் தாரைச் செலுத்த ஆய்வக வாயேஜர் விருதை பெற்றார்.
- இவர் 2015 பிப்ரவரி மாதம் சுபெரிக்சு (SPHEREx) முன்மொழிவுக் குழுவில் ஆற்றிய தன்னிகரிலாத பணிக்காக தாரைச் செலுத்த ஆய்வகத்தின் குழு விருதைப் பெற்றார்
- இவர் 2013 மே மாதம் தாரைச் செலுத்த ஆய்வகத்தின் மாரினர் விருதைப் பெற்றார்
- குரூபர் 2012 ஆம் ஆண்டின் அண்டவியல் பரிசு சார்லசு பென்னெட்டுக்கும் வில்கின்சன் நுண்ணலை ஆய்வு விண்கலக்(WMAP) குழுவுக்கும் வழங்கப்பட்டது.
- 2009 மே, 2010 மே. 2014 செப்டம்பர் என மும்முறை நாசாவின் குழுச் சாதனை விருது நாசாவின் பிளாங்கு விண்கல அறிவியல் குழுவில் உறுப்பினராக இருந்து ஆற்றிய பணிக்காக வழங்கப்பட்டது.
- * நாசாவின் குழுச் சாதனை விருது 2007 மே மாதம் நாசாவின் வில்கின்சன் நுண்ணலை ஆய்வு (WMAP) விண்கல அறிவியல் குழுவில் உறுப்பினராக இருந்து ஆற்றிய பணிக்காக வழங்கப்பட்டது.
- இவர் பிரான்சு அறிவியல் கல்வி மேம்பாட்டுக் கழகத்தின் (Société de secours des amis des sciences) ஆய்வு உறுப்பினரும் ஆவார்,
மேற்கோள்கள்
தொகு- ↑ "Origin of the Universe (3268): People". /science.jpl.nasa.gov. Jet Propulsion Laboratory. பார்க்கப்பட்ட நாள் 8 December 2017.
- ↑ "Olivier Doré". cita.utoronto.ca. University of Toronto. Archived from the original on 8 டிசம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 8 December 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Congratulations to Charles Bennett, Gary Hinshaw, Norman Jarosik, Lyman Page Jr., David Spergel and the WMAP Science Team for winning the 2018 Breakthrough Prize in Fundamental Physics". science.gsfc.nasa.gov. NASA. 3 December 2017. பார்க்கப்பட்ட நாள் 8 December 2017.